பப்ளிசிட்டிக்காக பேசுனா படத்தை தடை செய்வீங்களா? - தக் லைஃப் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
பப்ளிசிட்டிக்காக் இது போன்ற கருத்துக்களை முன் வைத்தார் என்று வாதிடப்பட்ட நிலையில், அதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், கமல் ஏதேனும் அவதூறு கருத்து தெரிவித்திருந்தால் அவதூறு வழக்கு தொடரலாம் அல்லது பதில் அறிக்கை விடலாமே தவிர படத்தை வெளியிட தடையாக இருக்கக் கூடாது எனக் கூறியது.

பப்ளிசிட்டிக்காக பேசுனா படத்தை தடை செய்வீங்களா? - தக் லைஃப் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
கமல்ஹாசன் நடித்து, மணி ரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ திரைப்படம் கடந்த ஜூன் 5 அன்று வெளியானது. இதற்கிடையே நடந்த அந்தப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில், கமல் கன்னட மொழி குறித்து பேசியது சர்ச்சையானது. இதற்காக அவர் மன்னிப்புக்கேட்க வற்புறுத்தப்பட்டார்.
மன்னிப்புக்கேட்காத கமல்ஹாசன்
ஆனால், அவர் மன்னிப்புக் கேட்க மறுத்து விட்டார். இந்த நிலையில் கர்நாடகா வர்த்தக சபை கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியிட தடை விதித்தது. இதனை எதிர்த்து கமல்ஹாசன் கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடினார்.
அங்கும் அவர் மன்னிப்புக்கேட்க வற்புறுத்தப்பட்டார். ஆனால், அதன்பின்னரும் கமல்ஹாசன் மன்னிப்புக்கேட்கவில்லை. இதனால் கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியாக வில்லை.