Amir Khan: அமீர் கானை சுற்றி வரும் திருமண வதந்தி.. 3ம் திருமணம் உறுதியானதா? விளக்கம் தருவாரா அமீர்?
Amir Khan: பாலிவுட் நடிகர் அமீர் கான் பெண் ஒருவருடன் ரகசிய உறவில் இருப்பதாகவும் அவருடன் விரைவில் திருமணமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

Amir Khan: அமீர் கான் தற்போது பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் ரகசிய உறவில் இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. அத்துடன், 59 வயதான அவர் மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், அமீர் கான் உறவு பற்றி பிலிம்பேர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சீரியஸ் ரிலேஷன்ஷிப்?
பிலிம்பேர் அறிக்கையின்படி, அமீர் கான் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தீவிர உறவில் உள்ளார். ஆனால் அவர் யார் என்பதை இப்போது வெளிப்படுத்த முடியாது. "அமீரின் ரகசிய பார்ட்னர் பெங்களூரில் உள்ளார்.
அவர்களின் தனியுரிமையை நாம் மதிக்க வேண்டும். அதனால்தான் விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், அமீர் கான் அந்தப் பெண்ணை தனது குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்த சந்திப்பு சிறப்பாக நடந்தது" என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன எனக் கூறியுள்ளது.
ரீனா தத்தாவுடன் திருமணம்
1986 ஆம் ஆண்டில் ரீனா தத்தாவை அமீர் கான் ரகசியமாக மணந்தார். இவர்களது திருமண விவகாரம் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வந்தது. இவர்களுக்கு ஜுனைத் மற்றும் இரா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜுனைத் திருமணம் முன்னதாக நடந்த நிலையில், இராவின் திருமணமும் கடந்த ஆண்டு நடந்தது.
2002 ஆம் ஆண்டில் ரீனா தத்தாவுடனான காதலை அமீர் கான் முறித்துக் கொண்டார். பின், அவர்கள் விவாகரத்து செய்தனர். இருப்பினும் ஜுனைத் மற்றும் இரா ஆகியோரை அமீர் கான் தன்னுடன் வைத்து பார்த்துக் கொண்டார்.
கிரண் ராவுடன் திருமணம்
பின், அமீர் கான் 2005 ஆம் ஆண்டு கிரண் ராவ் என்பவரை மணந்தார். இருவருக்கும் வாடகைத் தாய் மூலம் ஆசாத் என்ற மகன் பிறந்தார். இந்த உறவில் இருந்து இருவரும் 2021 ஆம் ஆண்டு பிரிந்தனர். இருப்பினும், இருவரும் ஆசாத்தை கவனித்து வருகின்றனர்.
அமீர் கானும், கிரண் ராவும் கணவன், மனைவியாக பிரிந்தாலும் தாங்கள் நண்பர்கள் என்று கூறினர். அதற்கு எடுத்துக்காட்டாக, கிரண் ராவ் இயக்கிய லபாடா லேடீஸ் 2024 ஆம் ஆண்டில் வெற்றி பெற்று பெரும் பாராட்டைப் பெற்றது. இப்படத்தை அமீர் கான் தயாரித்திருந்தார்.
3வது திருமணம்?
இப்போது, அமீர் கான் பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் உறவில் இருப்பதாகவும், அவர் மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன. இதற்கு அமீர் கான் ரியாக்ட் செய்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அடுத்தடுத்த படங்கள்?
அமீர் கான் நடிப்பில் சில ஆண்டுக்கு முன் வெளிவந்த தாரே ஜமீன் பர் படம் பெரும் வெற்றி மற்றும் வரவேற்பை பெற்றதால், அந்தப் படத்தின் தொடர்ச்சியாக அமீர் கான் தற்போது சித்தாரே ஜமீன் பர் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ரிலீஸிற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிடுவதாக இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அமீர் கான் மற்றும் கிரண் ராவ் தயாரிக்கின்றனர். அதே நேரத்தில் அமீர் கான், ரஜினி காந்தின் கூலி படத்தில் அமீர் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்