தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pradeep K Vijayan Death: ‘தெகிடி பட புகழ் நடிகர் பிரதீப் விஜயன் வீட்டில் சடலமாக மீட்பு!’ என்ன நடந்தது தெரியுமா?

Pradeep K Vijayan Death: ‘தெகிடி பட புகழ் நடிகர் பிரதீப் விஜயன் வீட்டில் சடலமாக மீட்பு!’ என்ன நடந்தது தெரியுமா?

Kathiravan V HT Tamil
Jun 13, 2024 02:08 PM IST

Pradeep K Vijayan Death: அவரது நண்பரான பிரபாகரன் கடந்த 2 நாட்களாக செல்போனில் அழைத்தும், பிரதீப் விஜயனிடம் இருந்து எந்த பதிலும் வராத காரணத்தால் பாலவாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று உள்ளார்.

Pradeep K Vijayan Death: ‘தெகிடி பட புகழ் பிரதீப் விஜயன் வீட்டில் சடலமாக மீட்பு!’ என்ன நடந்தது தெரியுமா?
Pradeep K Vijayan Death: ‘தெகிடி பட புகழ் பிரதீப் விஜயன் வீட்டில் சடலமாக மீட்பு!’ என்ன நடந்தது தெரியுமா?

ட்ரெண்டிங் செய்திகள்

தனிமையில் வசித்து வந்த பிரதீப் விஜயன் 

சென்னை பாலவாக்கம் பகுதியில் உள்ள சங்கராபுரம் முதல் தெருவில் நடிகர் பிரதீப் விஜயன் வசித்து வந்தார். அவருக்கு திருமணம் ஆகாத நிலையில், வீட்டில் தனிமையில் இருந்து உள்ளார். அவருக்கு ஏற்கெனவே மூச்சுத்திணறல் மற்றும் தலைச்சுற்றல் பிரச்னைகள் இருந்ததாக கூறப்படுகின்றது. 

வீட்டில் சடலமாக மீட்பு 

இந்த நிலையில் அவரது நண்பரான பிரபாகரன் கடந்த 2 நாட்களாக செல்போனில் அழைத்தும், பிரதீப் விஜயனிடம் இருந்து எந்த பதிலும் வராத காரணத்தால் பாலவாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று உள்ளார். 

அந்த வீட்டில் கதவு உள்தாளிடப்பட்டு இருந்த நிலையில், நீண்டநேரம் கதவை தட்டியும் பிரதீப் விஜயன் கதவை திறக்கவில்லை. இது குறித்து நீலாங்கரை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நீலாங்கரை போலீசார், தீயணைப்புத்துறையினர் உடன் வந்து வீட்டின் கதவை திறந்து உள்ளனர். அப்போது பின் கழிவறையில் தலைப்பகுதியில் அடிப்பட்ட நிலையில் நடிகர் பிரதீப் விஜயன் சடலமாக இருந்துள்ளார். அவரது உடலை மீட்ட காவல் துறையினர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்று உள்ளனர். 

காரணம் என்ன?

தலையில் அடிபட்டதாலும், அதனால் ஏற்பட்ட மாரடைப்பாலும் பிரதீப் விஜயன் உயிரிழந்து இருக்கலாம் என கருதப்படுகின்றது. 

இருப்பினும் வேறு ஏதாவது மருந்துகளை அவர் எடுத்துக் கொண்டாரா என்ற கோணத்திலும், வேறு கோணத்திலும் பிரதீப் கே.விஜயனின் இறப்பு குறித்து நீலாங்கரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் பிரதீப் கே.விஜயனின் மரணம் தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

யார் இந்த பிரதீப் கே விஜயன்?

பிரதீப் நாயர் என்றும், பப்பு என்றும் அறியப்படும் நடிகர் பிரதீப் கே.விஜயன் கடந்த 2013ஆம் ஆண்டில் வெளியான ’சொன்னா புரியாது’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். 

வில்லன் மற்றும் காமெடியன் கதாப்பாத்திரங்களில் நடித்தவர் 

கடந்த 2014ஆம் ஆண்டில் வெளியான தெகிடி திரைப்படத்தில் ’சடகோபன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் பிரதீப் கே.விஜயன் சினிமா ரசிகர்களின் கவனம் பெற்றார். 

வில்லன் கதாப்பாத்திரத்திலும், நகைச்சுவை கதாப்பாத்திரத்திலும் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய பிரதீப் கே.விஜயன் பல்வேறு திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். 

2015ஆம் ஆண்டில், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், 2016ஆம் ஆண்டில், ஒருநாள் கூத்து ஆகிய திரை படங்களில் நடித்து இருந்தார். 

2017ஆம் ஆண்டில், மட்டும் என்னோடு விளையாடு, மீசைய முறுக்கு, மேயாத மான், நெஞ்சில் துணிவிருந்தால், திருட்டுப்பயலே-2, சங்கு சக்கரம் ஆகிய 6 திரைப்படங்களில் நடித்து இருந்தார்.  

2018ஆம் ஆண்டில், இரும்புத்திரை திரைப்படத்தில் இவரது நடிப்பு கவனம் பெற்றது. 2019ஆம் ஆண்டில், ஆடை, கென்னடி க்ளப், ஹீரோ, 2020ஆம் ஆண்டில், மனம், 2012ஆம் ஆண்டில், சக்ரா, ரெடி, லிப்ட், 2022ஆம் ஆண்டில், அரங்கேற்றம், 2023ஆம் ஆண்டில், ருத்ரன் ஆகிய திரைப்படங்களில் பிரதீப்கே.விஜயன் நடித்து உள்ளார். 

WhatsApp channel

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.