Director rajakumaran: 'ஒரு படம் ஓடலன்னா ஊரவிட்டு ஓட போறது இல்ல.. அந்த வார்த்த காதுலயே இருக்கு'- டைரக்டர் ராஜகுமாரன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Rajakumaran: 'ஒரு படம் ஓடலன்னா ஊரவிட்டு ஓட போறது இல்ல.. அந்த வார்த்த காதுலயே இருக்கு'- டைரக்டர் ராஜகுமாரன்

Director rajakumaran: 'ஒரு படம் ஓடலன்னா ஊரவிட்டு ஓட போறது இல்ல.. அந்த வார்த்த காதுலயே இருக்கு'- டைரக்டர் ராஜகுமாரன்

Malavica Natarajan HT Tamil
Feb 02, 2025 02:23 PM IST

Director rajakumaran: விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் சரியா போகாத சமயத்துல விக்ரம் சார் மனைவி பேசிய வார்த்தை எல்லாம் இன்னும் என் காதுக்குள்ளவே இருக்கு என இயக்குநர் ராஜகுமாரன் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

Director rajakumaran: 'ஒரு படம் ஓடலன்னா ஊரவிட்டு ஓட போறது இல்ல.. அந்த வார்த்த காதுலயே இருக்கு'- டைரக்டர் ராஜகுமாரன்
Director rajakumaran: 'ஒரு படம் ஓடலன்னா ஊரவிட்டு ஓட போறது இல்ல.. அந்த வார்த்த காதுலயே இருக்கு'- டைரக்டர் ராஜகுமாரன்

அவர் எடுத்த ஒவ்வொரு படமும் குடும்ப ரசிகர்களை கவரும் வண்ணமாக இருந்தாலும், விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் அவருக்கு சரியாக அமையவில்லை. அதனால், தனக்கு ஏற்பட்ட மன வலிகளை சில மாதங்களுக்கு முன் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் சித்ரா லட்சுமணனுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பார்.

பாவமா இருக்குன்னு சொன்னாங்க

விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் ரெண்டு மூனு நாள் கழிச்சு நான் விக்ரம் சாருக்கு போன் பண்றேன். இது என்னால மறக்கவே முடியல. இத இப்ப சொன்னா நல்லது இல்ல தான். எனக்கு அது கஷ்டமா இருக்கும்.

விக்ரமுக்கு போன் பண்ணும் போது அவங்களோட மனைவி போன் வாங்கி பேசுறாங்க. அப்போ படம் சரியா ஓடலன்னு ஒரு டாக் இருக்கு. விக்ரமுக்கு ஒரு சேதுவே இன்னும் 5 வருஷத்துக்கு தாங்கும். நீங்கதான் அடுத்ததா என்ன பண்ண போறீங்கன்னு தெரியல. உங்கள நெனச்சா தான் எனக்கு பாவமா இருக்குன்னு சொன்னாங்க. அந்த வார்த்த இன்னும் என் காதுல ஒலிச்சிட்டு இருக்கு.

ஒரு படம் ஓடலைன்னா?

ஒரு படம் ஓடலன்னா டைரக்டர் ஊர விட்டே ஓடிடுவானா? அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. நான் முதல் படமே ஹிட் கொடுத்தவன். இது என்ன ஒரு அறியாமையான வார்த்தை. விக்ரம் சார், விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் பண்ணும் போது குடுத்த பேட்டியில, 80 படத்துக்கான கதைய கேட்டேன். ஆனா, விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்த ஓகே பண்ணேன்னு சொல்லிருப்பாரு. சௌத்ரி சார் கூட நான் என்ன பேப்பர்ல கதையா படிச்சனோ அத அப்படியே படமா எடுத்து குடுத்தவன் நீ தான்யா அப்படின்னு எல்லாம் சொன்னாரு. அப்படி நான் என்ன தப்பா எடுக்க போறேன். எல்லாமே ஒரு மனக்கசப்பு தான்.

எனக்கு இது நல்லாவே தெரியும்

இப்போ கூட விக்ரம், அல்ல அவரோட பையன் என்கிட்ட வந்தா, நான் சரத் குமார் சாரையும் குஷ்பு மேடமையும் வர சொல்லி நான் விண்ணுக்கும் மண்ணுக்கும் பார்ட் 2 எடுப்பேன். அது மறுபடியும் மக்கள் கிட்ட போய் சேறும். மக்கள்கிட்ட கதை போக வைக்குறதே ஒரு கலை. அது விக்ரமன் சாருக்கு பிரமாதமா தெரியும், அவர் கூட இருந்ததால எனக்கும் இது தெரியும்.

விண்ணுக்கும் மண்ணுக்கும் கதை

கோயம்பத்தூரில் உள்ள கிராமத்தின் தலைவர் சரத் குமார். இவரது மனைவி குஷ்பு. சரத் குமாரின் தம்பியான விக்ரம் சிங்கப்பூரில் படித்துவிட்டு ஊருக்கு வருகிறான். அங்கு, தன் கனவில் கண்ட பெண்ணை நடிகை தேவையானி வடிவில் பார்க்கிறான். அவளை திருமணம் செய்வதே தனது லட்சியமாக கொண்டிருக்கும் நிலையில், தேவையானி படப்பிடிப்புக்காக விக்ரம் ஊருக்கு வருவார்.

அங்கு தேவையானிக்கு விருப்பம் இல்லாமலே விக்ரமுடன் திருமணமும் நடக்கிறது. பின் தேவையானி விக்ரமை ஏற்றுக் கொள்கிறாரா அல்லது கைவிட்டு தன் தொழிலை பார்க்கிறாரா என்பது தான் கதை.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.