தமிழ் செய்திகள்  /  Entertainment  /  The Word Sangi Is Not A Bad Word - Explains Actor Rajinikanth

Rajinikanth: ’சங்கி என்பது கெட்டவார்த்தை இல்லை’ ரஜினி பரபரப்பு பேட்டி!

Kathiravan V HT Tamil
Jan 29, 2024 11:46 AM IST

”LalSalaam Audio Launch: ‘எனது தந்தை சங்கி இல்லை என்று லால் சலாம் பட இசைவெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ரஜினி காந்த் கூறி இருந்தார்.”

LalSalaam Audio Launch நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வரியா ரஜினிகாந்த்
LalSalaam Audio Launch நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வரியா ரஜினிகாந்த்

ட்ரெண்டிங் செய்திகள்

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், 'லால் சலாம்'. இந்தப் படத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாா். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறது. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள 'லால் சலாம்' திரைப்படம் வரும் பிப்.9 ஆம் தேதி ரிலீஸாகிறது.

இப்படத்தின் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 25ஆம் தேதி அன்று சென்னையில் நடைபெற்றது.

அப்போது விழா மேடையில் பேசிய லால் சலாம் படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ‘’அப்பாவை சங்கின்னு சொல்லும்போது கோபம் வரும். இப்போது சொல்கிறேன் ரஜினிகாந்த் சங்கி கிடையாது. சங்கியாக இருந்திருந்தால் அவர் லால் சலாம் படத்தில் நடித்திருக்கமாட்டார். அவர் மனிதநேயவாதி.

இந்தப் படத்தில் அவ்வளவு தைரியமாக யாருமே நடித்திருக்கமாட்டார்கள், அவரைத் தவிர.

நீங்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ரஜினி ரசிகனாக இந்தப் படம் உங்களை பெருமைப்பட வைக்கும்’எனப் பேசி இருந்தார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இந்த பேச்சு சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி பேசுபொருள் ஆனது. 

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் ரஜினி காந்த்திடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், சங்கி என்ற வார்த்தை கெட்டவார்த்தை இல்லை. எனது மகள் சரியாகவே பேசி உள்ளார். அப்பா ஆன்மீகவாதி அவரை ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பதுதான் ஐஸ்வர்யாவின் பார்வை என கூறி உள்ளார். 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.