Ajith: விஜய்யின் மகனிடம் அஜித் நடந்து கொண்ட விதம் - வெளியான புது தகவல்!
விஜய்யின் மகனிடம் அஜித் நடந்துகொண்ட விதம் கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இளம் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கும் விஜய்யின் மகன் சஞ்சய்க்கு அஜித் கால் செய்து பேசிய சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சமீபத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு புதிய படத்தை இயக்குவதற்கு கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின் அப்படத்தின் புரோமோஷனுக்கு பி.ஆர்.ஓ-வாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவை அணுகியுள்ளனர், படக்குழுவினர். ஆரம்பத்தில் தயக்கத்துடன் இதுகுறித்து அஜித்திடம் பேசியிருக்கிறார், சுரேஷ் சந்திரா. ஆனால், அஜித்தோ அனுமதியெல்லாம் வேண்டாம் கண்டிப்பாக போய் பண்ணுங்க என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதுமட்டும் அல்லாமல், தனது மேனேஜர் சுரேஷ் சந்திராவிடம், விஜய்யின் புதல்வன் சஞ்சய்யின் அலைபேசி எண்ணை வாங்கி, தானாக வாலண்டியராக கால் செய்து பேசியிருக்கிறார். மேலும், சஞ்சய்யின் இயக்கத்தில் உருவாகும் முதல் படத்துக்கு மனதார வாழ்த்துகளைக் கூறினாராம், அஜித்.
முன்னதாக சஞ்சய்யின் படம் குறித்த அறிவிப்பு வெளியானபோது, விஜய் தனது சோசியல் மீடியாவில் கூட பகிரவில்லை. பொதுவெளியில் வாழ்த்து தெரிவிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய்யின் மகனின் இயக்குநர் பணிக்கு, அவரது போட்டியாகப் பார்க்கப்படும் அஜித் போன் செய்து பாராட்டியது பெரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்