தமிழ் செய்திகள்  /  Entertainment  /  The Trailer Of Blue Star Will Be Released Tomorrow.

BlueStar : நாளை வெளியாகிறது 'ப்ளூ ஸ்டார்' படத்தின் ட்ரெய்லர்.. அதிகாரபூர்வ அறிவிப்பு!

Divya Sekar HT Tamil
Jan 09, 2024 08:23 PM IST

அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ள ப்ளூ ஸ்டார் படத்தின் ட்ரெய்லர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

 'ப்ளூ ஸ்டார்' படத்தின் ட்ரெய்லர்
'ப்ளூ ஸ்டார்' படத்தின் ட்ரெய்லர்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் ஏ. அழகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். வீதியோர துடுப்பாட்ட விளையாட்டை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் லெமன் லீஃப் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பா. ரஞ்சித், ஆர் கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி. சௌந்தர்யா ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.

வட தமிழகத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட இளம் தலைமுறையினரின் விளையாட்டுத் திறமையை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகி இருப்பதாலும், பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் வழங்குவதாலும் திரையுலகினரிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

இப்படத்தின் முதல் பாடலான ’ரயில் ஒலிகள்’ என்னும் பாடலின் லிரிக் வீடியோவை கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இப்பாடலை பின்னணிப் பாடகர் பிரதீப் குமாரும், பின்னணிப் பாடகி சக்திஸ்ரீ கோபாலனும் இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை கவிஞர் உமா தேவி எழுதியுள்ளார். இசை கோர்ப்புப் பணிகளை கோவிந்த் வசந்தா செய்துள்ளார்.

தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ள ப்ளூ ஸ்டார் படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. வரும் 25-ம் தேதியன்று உலகமெங்கும் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.