Yamakaathaghi OTT: இறந்த உடலை வைத்து வெளியான தமிழ் த்ரில்லர் திரைப்படம்.. எந்த ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?
Yamakaathaghi OTT: தமிழில் வெளியான சூப்பர் த்ரில்லர் படமான யமகாதகி திரைப்படம் இன்று ஆஹா தமிழ் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

Yamakaathaghi OTT: ரூபா கொடுவாயூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள யமகாதகி திரைப்படம் மார்ச் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படத்தை பாப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நரேந்திர பிரசாத் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த யமகாதகி திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது.
எங்கே ஸ்ட்ரீமிங்?
யமகாதகி திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இன்று (ஏப்ரல் 14) ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கியுள்ளது. தமிழில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.
தெலுங்கு நடிகை கோலிவுட் அறிமுகம்
தெலுங்கு நடிகை ரூபா கொடுவாயூர், யமகாதகி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். தெலுங்கில் உமா மகேஸ்வர உக்ர ரூபஸ்யா, மிஸ்டர் பிரெக்னன்ட் போன்ற படங்களில் ரூபா நடித்துள்ளார். அதன்பின் யமகாதகி மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரூபா அசத்தியுள்ளார்.
யமகாதகி படக்குழு
யமகாதகி திரைப்படம் சூப்பர் நேச்சுரல் திரைப்படமாக இயக்குனர் ஜெயசீலன் இயக்கியுள்ளார். இயக்குனராக இதுவே அவரது அறிமுக படம். இந்த படத்திற்கு ஜெசின் ஜார்ஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ரூபா, நரேந்திராவுடன் சேர்த்து கீதா கைலாசம், ராஜு ராஜப்பன், சுபாஷ் ராமஸ்வாமி, ஹரிதா, பிரதீப் துரைராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நைசத் மீடியா வேர்க்ஸ், அருணஸ்ரீ என்டர்டெயின்மென்ட் பேனர்களில் ஸ்ரீநிவாசராவ் ஜலகம், கணபதி ரெட்டி இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை இனி ஆஹா தமிழ் ஓடிடியில் பார்க்கலாம்.
யமகாதகி கதை
தஞ்சாவூரில் உள்ள ஒரு கிராமத்தில் தாய், தந்தை, அண்ணன், அண்ணியுடன் சேர்ந்து வாழ்கிறாள் லீலா (ரூபா கொடுவாயூர்). சிறுவயதிலிருந்தே ஆஸ்துமா பிரச்சனையால் அவதிப்படும் ரூபா எப்போதும் இன்ஹேலர் பயன்படுத்திக் கொண்டிருப்பாள். இப்படி இருக்கும் சூழலில் ஒருநாள் திடீரென்று இறந்து போன நிலையில் லீலா உடல் கிடக்கிறது.
அவளுடைய இறுதிச் சடங்கிற்கு குடும்பத்தினர் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வீட்டிலிருந்து லீலாவின் உடலை வெளியே கொண்டு வர முடியவில்லை. லீலாவின் மரணத்திற்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன? வீட்டை விட்டு வெளியேற அவளது உடல் ஏன் மறுக்கிறது? இந்த சம்பவத்திற்குள் புதைத்திருக்கும் ரகசியங்கள் வெளியே வருமா? இறுதியில் ரூபாவின் உடலை எடுத்துச் செல்ல முடிந்ததா? அவளுக்கு இறுதி சடங்கு நடந்ததா என்பது யமகாதகி திரைப்படத்தின் கதை.
