மொத்தமே 18 படங்கள்தான்.. மீதி அவ்வளவு ஃப்ளாப்தான்… 1000 கோடி வரை நஷ்டம்.. 2024 -ல் தள்ளாடிய தமிழ் சினிமா!
2024ம் ஆண்டு வெளியான 93 சதவீத திரைப்படங்களில் 7 சதவீத திரைப்படங்கள் மட்டுமே வெற்றிக்கனியை பெற்று இருக்கின்றன. 2024ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு 1000 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருக்கலாம் என்று விநியோகஸ்கர் சங்க தலைவரும், தயாரிப்பாளருமான கே ராஜன் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.- கே.ராஜன்
2024 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களில் எத்தனை திரைப்படங்கள் வெற்றிபெற்றுள்ளன, எத்தனை தோல்வியைப் பெற்றுள்ளன உள்ளிட்ட விபரங்களை திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவரும், தயாரிப்பாளருமான கே ராஜன் வருத்தம் வெளியிட்டு இருக்கிறார்.
ஆரம்பமே தோல்வி
2024ம் ஆண்டு ஆரம்பம் முதல் ஆண்டின் பாதிவரை வெளியான பெரும்பான்மையான திரைப்படங்கள் தோல்வியையே சந்தித்து இருக்கின்றன. ஆம், கடந்த ஆண்டு மொத்தமாக 241 திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் 223 திரைப்படங்கள் தோல்வியை சந்தித்து இருக்கின்றன. இந்தக்கணக்கின் படி மொத்தமாக 18 திரைப்படங்கள் மட்டுமே வெற்றியைப் பெற்று இருக்கின்றன.
5 கோடி வரையிலாக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருக்கின்றன
2024 ம் ஆண்டு 186 திரைப்படங்கள் சிறுபட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருக்கின்றன. இவை 2 கோடி முதல் 5 கோடி வரையிலாக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்தத் திரைப்படங்களுக்கு மட்டும் சுமார் 400 கோடி செலவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பெரிய பட்ஜெட் திரைப்படங்கள்
பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் 50 கோடி முதல் 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருக்கின்றன. இதில் சிவகார்த்திகேயனின் அமரன், தனுஷின் அசுரன், ரஜினியின் வேட்டையன், கார்த்தியின் மெய்யழகன், சுந்தர் சியின் அரண்மனை 4, விஜய்சேதுபதியின் மகாராஜா, அருள்நிதியின் டிமாண்டி காலனி 2, சூரியின் கருடன், மணியின் லவ்வர், தினேஷின் லப்பர் பந்து, ஹிப் ஹாப் ஆதியின் பிடி ஆர் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வசூலை பெற்றன.
அப்படி பார்க்கும் போது, 2024ம் ஆண்டு வெளியான 93 சதவீத திரைப்படங்களில் 7 சதவீத திரைப்படங்கள் மட்டுமே வெற்றிக்கனியை பெற்று இருக்கின்றன. இந்த தகவல்களின் படி, 2024ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு 1000 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருக்கலாம் என்று விநியோகஸ்கர் சங்க தலைவரும், தயாரிப்பாளருமான கே ராஜன் வருத்தம் தெரிவித்து இருக்கிறார். தரமான மற்றும் கவனம் ஈர்க்கும் கதை களம் அமைந்தால் மட்டுமே இந்த நிலைமை மாறும் என்று அவர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
பாய்ஸ், ஆவேசம், பிரேமலு உள்ளிட்ட பல திரைப்படங்கள்
முன்னதாக, மலையாள சினிமாவில் இருந்து வெளியான மஞ்சும்மள் பாய்ஸ், ஆவேசம், பிரேமலு உள்ளிட்ட பல திரைப்படங்கள் வெளியாகி பெரும் வெற்றி பெற்று இருந்தாலும், இதர திரைப்படங்கள் தோல்வியை சந்தித்த காரணத்தால், அங்கு 700 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றன.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்