Story of Song : கண்ணதாசன் வரிகள் புரியாமல் தவித்த இயக்குனர்.. எட்டடுக்கு மாளிகையில் பாடல் உருவான கதை!
பாத காணிக்கை படத்தில் இடம்பெற்ற எட்டடுக்கு மாளிகையில் பாடல் உருவான கதை குறித்து இதில் காண்போம்.

கே. சங்கர் இயக்கத்தில் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பாத காணிக்கை. இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி நடித்திருந்தனர். குழந்தை நட்சத்திரமாகக் கமல்ஹாசனும் நடித்திருந்தனர். உறவுகளால்தான் எல்லாப் பிரச்சினைகளும் சிக்கல்களும் துன்பங்களும் வரும் என்பதை உணர்த்தும் படமாக பாத காணிக்கை அமைந்திருக்கும்.
படத்தின் மிகப்பெரிய ஹைலைட் என்றால் அது பாடல் தான். வாழ்க்கையை தத்துவமாக, எளிய வரிகளில் கொடுத்திருப்பார் கண்ணதாசன். கலங்க வைத்திருப்பார் டி.எம்.எஸ் அப்படி இப்படத்தில் இடம்பெற்ற எட்டடுக்கு மாளிகையில் பாடல் உருவான கதை குறித்து இதில் காண்போம்.
”எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி
இன்று வேறு பட்டு நின்றானடி
இன்று வேறு
பட்டு நின்றானடி
தேரோடும் வாழ்வில்
என்று ஓடோடி வந்த என்னை
போராட வைத்தானடி கண்ணில்
நீரோட விட்டானடி
கண்ணில் நீரோட விட்டானடி
கையளவு உள்ளம்
வைத்து கடல் போல்
ஆசை வைத்து
விளையாட சொன்னானடி
என்னை விளையாட
சொன்னானடி அவனே
விளையாடி விட்டானடி”
இந்த பாடலில் எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் கணவன் விட்டுவிட்டுப் சென்றானடி என்று தொடங்கி இருப்பார் கண்ணதாசன். பாடலை எழுதி முடித்த்தும் இயக்குநர் ஷங்கர் ஏதோ கேட்க நினைத்தார். பிறகு விட்டுவிட்டார். படம் வெளியானது. இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆனது.
இந்த படத்தில் வெற்றியைக் கொண்டாட விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த விழாவுக்கு பஞ்சு அருணாச்சலம், கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் வருகை தந்தனர். இயக்குநர் ஷங்கர் அப்போது கண்ணதாசனிடம் ஒரு சந்தேகத்தை கேட்டுள்ளார். அதாவது நம்ம படத்துல வீடு வரை உறவு, அத்தை மகனே, பூஜைக்கு வந்த மல்ரே, எட்டடுக்கு மாளிகை பாட்டு எல்லாமே சூப்பர் ஹிட்டாயிடுச்சு.
எட்டடுக்கு மாளிகை பாட்டு ஹிட் ஆனாலும் அதில் பிழை இருப்பது போல இருக்கிறது. படத்திலும் எட்டடுக்கு மாளிகை இல்லை நீங்கள் எதற்கு அப்படி வரிகள் எழுதினீர்கள் என்று எனக்கு புரியவில்லை என கேட்டுளார். அதற்கு கண்ணதாசன் பஞ்சு அருணாச்சலமிடம் கேள் அவர் சொள்ளுவார் என கூறியுள்ளார்.
இயக்குனர் ஷங்கர் அவரிடம் போய் கேட்கையில் அதற்கு பதிலளித்த பஞ்சு இந்த பாட்டு தான் ஹிட் ஆச்சு இல்லை எதுக்கு இத இப்ப கேட்கிறாய் கவிதை நடை அவ்வளவுதான் என்று கூறினார் பஞ்சு.
கண்ணதாசனுக்கு அப்போதுதான் தன்னைத்தவிர யாருக்குமே பாடலின் உண்மையான அர்த்தம் புரியவில்லை என்பதே புரிந்தது. பின்னர் அவரே விளக்கினார். அதாவது எட்டடுக்கு மாளைகைன்னா அவள் கணவரோட எட்டு ஜான் உடம்பு. உடம்புக்கு மேல என்ன இருக்கு? தலைதான? எம்புருஷன் என்னைத் தலையில தூக்கி வச்சி ஆடுறார்னு பொண்ணுங்க சந்தோஷப்படுறதில்ல, அதமாதிரிதான் எட்டு ஜான் உடம்புங்கற மாளிகைல ஏற்றி வைத்த என் கணவன் புரியுதா என்றார். இந்தப் பாட்டில் இப்படி ஒரு மெல்லிய இலக்கிய உவமையை கவிஞர் புகுத்தியது எல்லாருக்குமே அப்போதுதான் தெரிந்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
