Athmika: சினிமாவில் வாரிசு ஆதரவை எதிர்த்த துணிவு.. கோவையில் இருந்து வந்து தன்னை நடிகையாக நிலைநிறுத்திய ஆத்மிகாவின் கதை
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Athmika: சினிமாவில் வாரிசு ஆதரவை எதிர்த்த துணிவு.. கோவையில் இருந்து வந்து தன்னை நடிகையாக நிலைநிறுத்திய ஆத்மிகாவின் கதை

Athmika: சினிமாவில் வாரிசு ஆதரவை எதிர்த்த துணிவு.. கோவையில் இருந்து வந்து தன்னை நடிகையாக நிலைநிறுத்திய ஆத்மிகாவின் கதை

Marimuthu M HT Tamil Published Feb 09, 2025 05:51 AM IST
Marimuthu M HT Tamil
Published Feb 09, 2025 05:51 AM IST

Athmika: கோவையில் இருந்து வந்து தன்னை நடிகையாக நிலைநிறுத்திய ஆத்மிகாவின் கதையினை அவரது பிறந்த நாளான இன்று பார்ப்போம்.

Athmika: சினிமாவில் வாரிசு ஆதரவை எதிர்த்த துணிவு.. கோவையில் இருந்து வந்து தன்னை நடிகையாக நிலைநிறுத்திய ஆத்மிகாவின் கதை
Athmika: சினிமாவில் வாரிசு ஆதரவை எதிர்த்த துணிவு.. கோவையில் இருந்து வந்து தன்னை நடிகையாக நிலைநிறுத்திய ஆத்மிகாவின் கதை

நடிகை ஆத்மிகா தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். கோவையைச் சார்ந்த நடிகை ஆத்மிகா எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர்.

யார் இந்த ஆத்மிகா?:

நடிகை ஆத்மிகா தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் பகுதியைச் சார்ந்தவர் ஆவார். இவர், 1993ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி பிறந்தவர். சென்னையின் எம்.ஓ.பி. வைஸ்ணவா மகளிர் கல்லூரியில் பட்டப்படிப்பைப் படிப்பதற்காக இவர் சென்னை வந்தார். பின், சென்னையிலேயே தங்கி இருந்து சினிமாக்களில் நடித்து வருகிறார். இவரது குடும்பத்துக்கும் திரைப்படத் துறைக்கும் எந்தவொரு தொடர்போ, பின்புலமோ கிடையாது. கொரோனா ஊரடங்கின்போது, ஆத்மிகாவின் தந்தை ஜூன் 26, 2020ல் இதய நோய்க்கோளாறு காரணமாக இயற்கை எய்தினார். இதனால் சற்று மன உளைச்சலில் இருந்த ஆத்மிகா மீண்டும் நடிப்புத்துறையில் தன் கவனத்தை செலுத்தி வருகிறார்.

நடிப்புத்துறையில் ஆத்மிகா:

முன்னதாக, சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் படிக்கும்போது, ஆத்மிகாவுக்கு நடிப்பு மீது ஆர்வம் வந்தது. அப்போது கல்லூரியில் எடுக்கப்பட்ட சில குறும்படங்களிலும் சில மாடலிங் விளம்பரங்களிலும் நடித்தார், ஆத்மிகா. பின், ராஜீவ் மேனன் இயக்கிய குறும்படத்தில் நடித்தார். அது கோலிவுட் வட்டாரத்தில் ஆத்மிகாவுக்கு நல்ல வரவேற்பினைப் பெற்றது. மேலும் இவரது ஆன்லைன் ஃபுரோபைலைப் பார்த்த கோவையைப் பூர்வீகமாகக் கொண்ட, இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி, தான் இயக்கி நடித்த முதல் படமான ‘மீசைய முறுக்கு’ படத்தில் கதாநாயகியாக ஆத்மிகாவை அறிமுகப்படுத்தினார். அப்படத்தை கோவையைச் சார்ந்த சுந்தர்.சி தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து ’துருவங்கள் பதினாறு’ படம் மூலம் பிரபலமான, இயக்குநர் கார்த்திக் நரேக் ‘நரகாசுரன்’ என்னும் படத்தை இயக்கினார். அதில் ஆத்மிகா நடித்துள்ளார். பொருளாதாரப் பிரச்னைகளால் இப்படம் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது. 2017ஆம் ஆண்டு ஓப்போ சென்னை டைம்ஸ் ஃபிரெஸ் ஃபேஸ் போட்டியில் நடுவராகப் பங்கேற்றார், நடிகை ஆத்மிகா.

படிப்படியாக திரைவாய்ப்புகளைப் பெறும் ஆத்மிகா:

அந்த ஆண்டு, இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ’கோடியில் ஒருவன்’ படத்தில், வேதவதி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் ஈர்த்தார், நடிகை ஆத்மிகா. மேலும், 2018ஆம் ஆண்டு ‘காட்டேரி’ என்னும் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார், ஆத்மிகா. ஆனால், அப்படம் 2022ஆம் ஆண்டு வெளியானது.

பின் உதயநிதி ஸ்டாலின் மு.மாறன் என்பவரது இயக்கத்தில் நடித்த ‘கண்ணை நம்பாதே’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்படம் 2023ஆம் ஆண்டு வெளியானது. பின் திருவின் குரல் என்னும் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாகவும் இயக்குநர் பாரதிராஜாவுடனும் நடித்தார்.

அதிருப்தியை வெளிப்படுத்திய நடிகை ஆத்மிகா:

'விருமன்’ படம் 2022ஆம் ஆண்டு வெளியானபோது, இயக்குநர் ஷங்கரின் மகளான நடிகை அதிதி ஷங்கருக்கு திரைத்துறையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதைக் கண்டு கொதித்து எழுந்தார், நடிகை ஆத்மிகா. மேலும் திரைத்துறையில் நடக்கும் வாரிசு ஆதரவினை கடுமையாக விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது கோலிவுட்டிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இது தவிர, 2022ஆம் ஆண்டு, இசையமைப்பாளர் அனீவியின் ‘மயக்குறீயே’ஆல்பத்தில் நடித்து இருந்தார்.

நல்ல வடிவழகியாகயும் நடிகையாகவும் திகழும் கோவையைச் சார்ந்த தமிழ்ப்பெண் நடிகை ஆத்மிகா திரைத்துறையில் மிளிர வாழ்த்துகிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!

மேலும் படிக்க: ஆத்மிகா யார்?

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.