ஆண்களின் சபலபுத்தியை யூஸ் செய்தவர்.. சிவாஜியையே கலாய்த்த தைரியம்.. முந்தானை முடிச்சில் 10 மடங்கு லாபம்.. பாக்யராஜின் கதை
ஆண்களின் சபலபுத்தியை யூஸ் செய்தவர்.. சிவாஜியையே கலாய்த்த தைரியம்.. முந்தானை முடிச்சில் 10 மடங்கு லாபம்.. பாக்யராஜின் கதையைப் பார்ப்போம்.

அந்த ஏழு நாட்கள், முந்தானை முடிச்சு, டார்லிங் டார்லிங், டார்லிங், தாவணிக் கனவுகள் ஆகிய பல வெற்றிப் படங்களை இயக்கியவர், இயக்குநர் பாக்யராஜ். திரைக்கதை மன்னர் என புகழப்படும் பாக்யராஜ், தமிழ் சினிமாவில் செய்த பல்வேறு விஷயங்கள் குறித்துப் பார்ப்போம்.
யார் இந்த பாக்யராஜ்?:
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள வெள்ளன்கோயில் என்னும் குக்கிராமத்தில் கிருஷ்ணசாமி - அமராவதி அம்மாள் தம்பதியருக்கு 1953ஆம் ஆண்டு, ஜனவரி 7ஆம் தேதி பிறந்தவர் தான், கே.பாக்யராஜ். செல்வராஜ், தன்ராஜ் ஆகிய இருமகன்களுக்குப் பின் மூன்றாவதாகப் பிறந்தவர். இவர் தனது படங்களில் துணைவேடத்தில் நடித்த பிரவீணாவை திருமணம் செய்தார். துரதிர்ஷ்டவசமாக அவர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அப்போது உச்ச நடிகையாக இருந்த பூர்ணிமா ஜெயராமை மணந்துகொண்டார். இந்த தம்பதியருக்கு சரண்யா - சாந்தனு ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர்.
திரை வாழ்வு தந்த ஏற்றம்:
ஆரம்பத்தில் இருந்தே சினிமாவில் ஒரு பெரிய இயக்குநராக வேண்டும் என்னும் முனைப்பில் சென்னைக்குக் கிளம்பிய கே.பாக்யராஜ், பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே திரைப்படத்தில் உதவி இயக்குநராக சேர்ந்தார். பின் ’சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் வசனம் எழுதிய பாக்யராஜ், பாரதிராஜா எழுதி இயக்கிய ’புதியவார்ப்புகள்’ படத்துக்கு வசனம் எழுதியதோடு, அதே படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும் அறிமுகம் ஆனார்.
