Story Of Song : ஒதுக்கப்பட்ட எஸ்பிபி.. கெத்துக் காட்டிய டிஎம்எஸ்.. தாய் இல்லாமல் நான் இல்லை பாடல் உருவான கதை!
அடிமைப் பெண் படத்தில் இடம்பெற்ற தாய் இல்லாமல் நான் இல்லை பாடல் உருவான கதை குறித்து இதில் காண்போம்.
1969 ஆம் ஆண்டு இயக்குனர் கே ஷங்கர் இயக்கத்தில் நடிகர் எம் ஜி ராமச்சந்திரன் தானே தயாரித்த நடித்த திரைப்படம் அடிமைப் பெண். இதில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா என இருவருமே இரட்டை வேடங்களில் நடித்து உள்ளனர். படத்தில் எம் ஜி ஆர் வேங்கையன் என்னும் கதாபாத்திரத்திலும் ஜெயலலிதா வேங்கைமலை ராணியாகவும் ஜீவா என்னும் கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார்.
அதிலும் ஜெயதலிதா தனது சொந்த குரலில் பாடலை பாடியும் இருக்கிறார். எம்.ஜி.ஆர் நடித்த பெரும்பாலான படங்கள் ஸ்டுடியோவிலேயே படமாக்கப்பட்டுவிடும், வெளிப்புற காட்சிகள் மிகக் குறைவாக இருக்கும் என்ற எண்ணம் அன்றைய காலகட்டத்தில் இருந்தது.
தன் படங்களின் மீது ரசிகர்களின் எண்ணத்தை மாற்ற ‘அடிமைப் பெண்’ திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஓகேனக்கல் நீர்வீழ்ச்சி, ஜெய்ப்பூர் அரண்மனை, ராஜஸ்தான் பாலைவனம், ஊட்டி போன்ற இடங்களில் படமாக்கினார் எம்.ஜி.ஆர்.
‘அடிமைப் பெண்’ திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஆயிரம் நிலவே வா' பாடலை முதன் முதலாக எம்ஜிஆருக்காக எஸ்.பி பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார். இப்படத்தில் 'அம்மா என்றால் அன்பு' என்ற பாடலை ஜெயலலிதா பாடி இருந்தார். தாய் இல்லாமல் நான் இல்லை என்ற பாடலை டிஎம் செளந்தர்ராஜன் பாடியிருபார். இப்பாடல் உருவான கதை குறித்து இதில் காண்போம்.
"தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாய் இல்லாமல் நான் இல்லை
ஜீவ நதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
ஜீவ நதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
தவறினை பொறுப்பாள்
தர்மத்தை வளர்ப்பாள்
தரணியிலே வளம் சேர்த்திடுவாள்"
தாய்க்காக மிக அருமையாக இப்பாடல் வரவேண்டும் என்ற நோக்கில் இப்பாடல் எழுத பல்வேறு பாடல் ஆசிரியர்களை எழுத வைத்துள்ளார்கள். கிட்டத்தட்ட 40 முறை இப்பாடல்களை எழுதியுள்ளனர். ஆனால் எந்த பாடலும் நினைத்ததை போல் வரவில்லை.
பின்னர் இப்பாடலை ஆலங்குடி சோமுவை வைத்து எழுத வைத்துள்ளனர். அவர் எழுதிய பாடல் வரிகள் அனைவருக்கும் மிகவும் பிடித்துப் போய்விட்டது. எனவே இப்பாடலை எஸ்பிபி-ஐ வைத்து பாட வைத்துள்ளனர். அவர் பாடியது நன்றாக இருந்தாலும் எம்ஜிஆருக்கு ஏற்ற கம்பீரக் குரல் இல்லை. அவரின் குரல் இளமைக் குரலாக உள்ளது. ஆனால் பாடல் மிகவும் அருமையாக உள்ளது என கூறியுள்ளனர்.
எனவே அடுத்த சாய்ஸ் அனைவருக்கும் வந்தது டிஎம்எஸ் தான். அவரிடம் போய் இப்பாடலை பாடுவதற்கு அழைத்துள்ளனர். அவர் மகன் திருமண வேலையாக பிஸியாக இருந்துள்ளார். அதனால் என்னால் இப்போது பாட முடியாது என கூறியுள்ளார். பின்னர் நீங்கள் இப்பாடலை பாடி கொடுத்து விட்டு செல்லலாமே என கேட்ட நிலையில் இல்லை எனக்கு வேலை பிசியாக இருக்கிறது என கூறியுள்ளனர்.
பின்னர் இப்படத்தில் இடம்பெற்ற ஆயிரம் நிலவே வா பாடலை எஸ்பிபி வைத்து பாட வைத்துள்ளனர். சிறிது காலம் கழித்து டிஎம்எஸ் -ஐ இப்பாடலை பாட மீண்டும் அழைத்துள்ளனர். அப்போது டிஎம்எஸ் ஓகே பாடி விடலாமே எனக் கூறி வந்துள்ளார். ஆனால் அவர் ஒரு நிபந்தனை வைத்துள்ளார். அதாவது இப்பாடலுக்கு அவருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதற்கு முன்பாக 500 ரூபாய் வாங்கிக் கொண்டிருந்த அவர் இப்பாடலுக்கு ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். இதற்கு எம்ஜிஆர் ஓகே நான் தருகிறேன் எனக்கூறி இப்பாடலை பாட வைத்துள்ளனர். இப்பாடல் இப்படி தான் உருவானது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்