Story of Song : மகன் திருமணத்திற்கு பணம் இல்லாமல் தவித்த கண்ணதாசன்.. கை கொடுத்த தெய்வம்.. மருதமலை பாடல் உருவான கதை!
தெய்வம் படத்தில் இடப்பெற்ற மருதமலை மாமணியே முருகய்யா பாடல் உருவான கதை குறித்து இதில் காண்போம்.

1972 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தெய்வம். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கிருபானந்த வாரியார்,ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
முருகனின் அருள் திருவிளையாடல்கள் ஆறினை அக்காலத்தின் முறைமையில் நடைபெற்றதைப்போல் கிருபானந்த வாரியார் தம் சொற்பொழிவில் மக்களுக்கு அறிவிப்பதைப்போன்று தொடங்குகிறது. தனித்தனி பிரச்சனைகளும் அதனை முருகன் தன் திருவிளையாடலில் ஆட்கொள்ளும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே ஹிட். அப்படி இப்படத்தில் இடப்பெற்ற
மருதமலை மாமணியே முருகய்யா பாடல் உருவான கதை குறித்து இதில் காண்போம்.
”கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை
அஆஆ.. மருதமலை மருதமலை முருகா
மருதமலை மாமணியே முருகய்யா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உமது மங்கல மந்திரமே
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா”
கண்ணதாசன் வரிகளில் குன்றக்குடி வைத்தியநாதன் இசையில் மதுரை சோமு கம்பீர குரலில் அமைந்த அற்புதமான பாடல் இது. கண்ணதாசன் அவரின் மகனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்கிறார். ஆனால் அதற்கு போதிய பணம் இல்லாததால் மிகுந்த மன உளைச்சலுடனும் மன அழுத்தத்துடனும் இருந்து வந்துள்ளார். அந்த சமயத்தில் கண்ணதாசனுக்கு தெய்வம் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.
பின்னர் பாடல் எழுத சென்ற கண்ணதாசனை இசையமைப்பாளர் குன்றக்குடி வைத்தியநாதன் கண்ணதாசன் திறமையை பல்வேறு விதமாக சோதனை செய்கிறார். பல மெட்டுக்களை போட்டு அந்த மெட்டுக்களுக்கு கண்ணதாசனை பாடல் எழுத சொல்கிறார். கண்ணதாசனும் அவர் போடும் எல்லா மெட்டுக்கும் வரிகளை எழுதிக் கொடுக்கிறார்.
அந்தப் பாடல் தான் மருதமலை மாமணியே முருகய்யா என்ற பாடல். அப்போது பக்கத்து அறையில் இருந்த தயாரிப்பாளர் சின்னப்ப தேவர் இந்தப் பாடல் வரிகளைக் கேட்டு சந்தோஷமடைந்து தேவரின் குலம் காக்கும் வேலையா என்ற வரி எனக்காக எழுதிய வரி போலவே உள்ளது என கூறி எல்லாம் முருகனின் செயல் என சொல்லிக்கொண்டு ஒரு லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு அதனை கண்ணதாசனிடம் கொடுக்கிறார். கண்ணதாசனும் அந்த முருகனே கொடுப்பதாக எண்ணி அந்த பணத்தை பெற்றுக் கொள்கிறார். இப்படிதான் இப்பாடல் உருவானது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்