Story of Song : இந்த பாடல் எம்எஸ்விக்காக எழுதியதாம்.. செம ஹிட்.. அவனுக்கென்ன தூங்கிவிட்டான் பாடல் உருவான கதை!
Story of Song : பெரிய இடத்துப் பெண் படத்தில் இடம்பெற்ற அவனுக்கென்ன தூங்கிவிட்டான் பாடல் உருவான கதை குறித்து இதில் காண்போம்.

பெரிய இடத்துப் பெண், 1963ம் ஆண்டு வெளியான எம்ஜிஆர் நடித்த திரைப்படம். காதல், காமெடி என எம்ஜிஆருக்கு நல்ல புகழை பெற்றுத்தந்த திரைப்படம். இந்தப்படத்தை இயக்குனர் ராமண்ணா இயக்கியிருந்தார். இந்தப்படம் 1963ம் ஆண்டு மே 10ம் தேதி வெளியாகியது.
சரோஜாதேவி முக்கிய கதாபாத்திரத்தில் நடத்திருப்பார். எம்.ஆர்.ராதா, டி.ஆர்.ராஜகுமாரி உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள். நூறு நாட்களை கடந்து ஓடிய பிளாக் படர் ஹிட் கொடுத்த திரைப்படமாக பெரிய இடத்துப் பெண் இருந்தது. இந்தப்படத்தில் ஒரு கூடுதல் சிறப்பு என்னவென்றால், படத்தின் அனைத்து பாடல்களையும் டி.எம்.எஸ் மட்டுமே பாடியிருப்பார். அனைத்து பாடல்களையும் எழுதியவர் கண்ணதாசன். இசையமைத்தவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆவர்.
படத்தின் அனைத்து பாடல்களுமே ஹிட், இன்று வரை நெஞ்சில் நீங்காமல் குடியிருப்பவை. அன்று வந்ததும் அதே நிலா பாடல் டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலாவின் குரலில் இன்றும் நமது நெஞ்சைவிட்டு நீங்காத பாடலாக உள்ளது. அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவா? என்ற சோகப்பாடலும் தெறி ஹிட் கொடுத்த பாடல்தான். மற்றுமொரு கொண்டாட்டமான பாடல் கண்ணென்ன கண்ணென்ன கலங்குதா பாடலும் கொண்டாட்டமான மனநிலையில் பாடப்பட்ட நல்ல ஹிட் பாடல் ஆகும்.