கண்ணதாசனை அசிங்கபடுத்திய அண்ணன்.. பாடலில் ஆதங்கத்தை கொட்டிய கண்ணதாசன்.. அண்ணன் என்னடா தம்பி என்னடா பாடல் உருவான கதை!
இயக்குனர் பீம் சிங் இயக்கத்தில், 1965-ஆம் ஆண்டு வெளியான பழனி திரைப்படத்தில் இடம்பெற்ற அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே பாடல் உருவான கதை குறித்து பார்க்கலாம்.

தமிழ் சினிமா மட்டுமல்லாது தமிழ் மொழியையும் தாங்கி பிடித்து வளர்த்தெடுத்தவர் கவியரசர் கண்ணதாசன். பல பத்திரிகைகளில் பணியாற்றி தனது கதையை பல பரிமாணங்களில் எழுதியுள்ளார். தனது எழுத்து திறமையால் 17 வயதிலேயே ஒரு பத்திரிக்கையின் ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டார். கவிதைகள் எழுதி மிகப்பெரிய அடையாளத்தை பெற்றார் கண்ணதாசன். அதன் பின்னர் சினிமாவிற்கு பாடல் எழுத வேண்டும் என ஒரு சிந்தனை தோன்றியுள்ளது. பின்னர் மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலக்காவில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
அங்கேதான் இவருக்கு கலைஞர் கருணாநிதியின் நட்பு கிடைத்துள்ளது. அதற்குப் பிறகு கதைகள் எழுதுவதை விட்டுவிட்டு திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதுவதை முழுமூச்சாக செய்தார். அனைத்து விதமான பாடல்களையும் மிகவும் எளிமையாக எளிதாக தமிழ் நயம் மாறாமல் எழுதக்கூடிய திறன் கொண்டவராக விளங்கி வந்தார். உணர்வுகளுக்கு மொழியால் வடிவம் கொடுக்க முடியும் என்றால் அது கவியரசர் கண்ணதாசன் மட்டுமே சாத்தியம்.
மக்கள் மனதை வசியப்படுத்தும் பாடல் வரிகள்
கண்ணதாசன் எந்த சூழ்நிலை கொடுத்தாலும் அதற்கு ஏற்றவாறு பாடல்களை எழுதும் திறம் கொண்டவர். காதல், சோகம், விரக்தி என எல்லா சூழ்நிலைக்கும் ஏற்ப வரிகளை கொடுத்து மக்கள் மனதை வசியப்படுத்தி விடுவார் என்றே சொல்லலாம். எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ஆகியோருக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் கண்ணதாசன்.
