Story of Song : மனைவியை சாவின் விழும்பில் இருந்து காப்பாற்றிய புலமைப்பித்தன்.. அடி வண்ணக்கிளியே பாடல் உருவான கதை!
மிருதங்க சக்கரவர்த்தி படத்தில் இடம்பெற்ற அடி வண்ணக்கிளியே இங்கு பாடல் உருவான கதை குறித்து இதில் காண்போம்.
சிவாஜி -கே.ஆர்.விஜயா இணைந்து நடித்த பல படங்களில், முக்கியமான திரைப்படம், ‘மிருதங்க சக்கரவர்த்தி’கலைஞானம் தனது பைரவி பிலிம்ஸ் சார்பில், கதை எழுதி தயாரித்த இந்தப் படத்துக்கு பனசை மணி திரைக்கதையும் ஏ.எல்.நாராயணன் வசனமும் எழுதியிருந்தனர். கே.சங்கர் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
சிவாஜி, கே.ஆர்.விஜயாவுடன், நம்பியார், பிரபு, சுலக்ஷனா, தேங்காய் சீனிவாசன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் சிவாஜிக்கு மிருதங்கம் வாசிப்பது எப்படி என்று கற்றுக்கொடுத்தது, பிரபல மிருதங்க வித்வான், உமையாள்புரம் சிவராமன். படத்தில் அவருக்கு மிருதங்கம் வாசித்தவரும் இவர்தான்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடல்கள் அனைத்தும் வரவேற்பைப் பெற்றன. வாலியும் புலமைப்பித்தனும் பாடல்கள் எழுதியிருந்தனர். ‘நாதமயமான இறைவா’, ‘அடி வண்ணக்கிளியே இங்கு’, ‘கோபாலா கோவிந்தா முகுந்தா’, ‘இது கேட்கத் திகட்டாத கானம்’, ‘சுகமான ராகங்களே’, ‘அபிநய சுந்தரி’ என அனைத்துப் பாடல்களும் வரவேற்பைப் பெற்றன.
அப்படி இப்படத்தில் இடம்பெற்ற அடி வண்ணக்கிளியே இங்கு பாடல் உருவான கதை குறித்து இதில் காண்போம்.
”அடி வண்ணக் கிளியே இங்கு
தன்னந்தனியே என்னை
விட்டு விட்டுப் போக சம்மதமோ
அடி வண்ணக் கிளியே இங்கு
தன்னந்தனியே என்னை
விட்டு விட்டுப் போக சம்மதமோ
விட்டு விட்டுப் போக சம்மதமோ
சிரித்தால் சிரித்து அழுதால் துடித்து
வாழ்ந்திடும் சொந்தங்கள் நாம் அடைந்தோம்
சிரித்தால் சிரித்து அழுதால் துடித்து
வாழ்ந்திடும் சொந்தங்கள் நாம் அடைந்தோம்
இசையால் இணைந்தோம்
இதயம் கலந்தோம்
ஈருயிர் ஒன்றென்று நாம் இருந்தோம்
இசையால் இணைந்தோம்
இதயம் கலந்தோம்
ஈருயிர் ஒன்றென்று நாம் இருந்தோம்
அடி வண்ணக் கிளியே இங்கு
தன்னந்தனியே என்னை
விட்டு விட்டுப் போக சம்மதமோ”
இந்தப் பாடலுக்கும் புலமைப்பித்தன் அவர்கள் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இருக்கிறது. இப்பாடலில் வரும் சூழ்நிலைதான் புலமைப்பித்தன் வாழ்விலும் நிகழ்ந்துள்ளது. அதனால் தான் என்னவோ இப்பாடல் அவ்வளவு உணவுப்பூர்வமான வரிகளால் நம்மை கட்டி போட்டு இருக்கும். புலமைப்பித்தன் தனது ஆசிரியர் பணியை விட்டுவிட்டு தனது இரு பிள்ளைகள் மனைவியுடன் சென்னைக்கு குடிப்பெயர்ந்துள்ளார்.
அவர் சினிமாவை நம்பி தான் சென்னைக்கு வந்துள்ளார். அன்றைக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் குடும்பம் மிகவும் வறுமையில் இருந்தது. அதேபோல இவருக்கு உடல் நிலையும் சரியில்லாமல் போனது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் பிழைப்பது கஷ்டம் என சொல்லி உள்ளன. இதனை பார்த்த மனைவி மனம் வருந்தி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது புலமைப்பித்தன் அங்கு வேலை செய்யும் ஊழியர் ஒருவரை அழைத்து என் வீட்டிற்கு சென்று நான் நலமாக இருக்கிறேன் என்று என் மனைவியிடம் சொல் என கூறி அனுப்பியுள்ளார்.
அங்கு ஊழியர் சென்ற போது புலமைப்பித்தனின் மனைவி வரக்காபியில் விஷம் கலந்து தனது இரு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு தானும் குடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார். அதற்காக வரக்காபியில் விஷத்தை கலந்து ரெடியாக வைத்துள்ளார். அந்த சமயத்தில் வந்த ஊழியர் உங்கள் கணவர் நலமாக உள்ளார் என சொன்னதும் நான் நம்ப மாட்டேன் மருத்துவர் சொன்னதை நான் கேட்டேன் என அவர் கூறுகிறார்.
அதற்கு அந்த ஊழியர் வேண்டுமென்றால் நீங்களே வந்து மருத்துவமனையில் பாருங்கள் எனக் கூறி அவரை அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர் நலமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். இந்த மாதிரியான ஒரு சூழ்நிலை தான் இந்தப் பாடலுக்கும். எனவே தன் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து இந்த பாடல் வரிகளை புலமைப்பித்தன் உணர்ந்து எழுதி இருப்பார். இப்பாடல் வரிகள் பிறந்த கதை இப்படிதான்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9