தமிழ் செய்திகள்  /  Entertainment  /  The Story Behind The Song Aadi Masa Kathathidika Featured In The Movie Payum Puli

Story Of Song : ரஜினிக்காக பாடி வருத்தப்பட்ட எஸ்.பி.பி.. இதுக்குதான் என்னை அப்படி பாட வச்சீங்களா? ஆடி மாச பாடல் கதை!

Divya Sekar HT Tamil
Jan 18, 2024 05:45 AM IST

Story Of Song : பாயும் புலி படத்தில் இடம்பெற்ற ஆடி மாச காத்தடிக்க வாடி கொஞ்சம் சேத்தணைக்க பாடல் உருவான கதை குறித்து பார்க்கலாம்.

பாயும் புலி படத்தில் இடம்பெற்ற ஆடி மாச காத்தடிக்க வாடி கொஞ்சம் சேத்தணைக்க பாடல் உருவான கதை
பாயும் புலி படத்தில் இடம்பெற்ற ஆடி மாச காத்தடிக்க வாடி கொஞ்சம் சேத்தணைக்க பாடல் உருவான கதை

ட்ரெண்டிங் செய்திகள்

இப்படத்தில் பரணியாக ரஜினியும்; ரேவதியாக ராதாவும்; ரஞ்சித்தாக ஜெய்சங்கரும் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர்.தற்காப்புக்கலை பயிற்றுவிக்கும் ஆசானாக பழம்பெரும்நடிகர் கே.பாலாஜியும், சிலோன் சுந்தரியாக மனோரமாவும், அவரது மாமாவாக வி.கே.ராமசாமியும் நடித்திருந்தனர். சத்யராஜ் அடியாளாகவும், தியாகராஜன் தியாகுவாகவும் நடித்திருந்தனர். மேலும் சில்க் ஸ்மிதா ரூபாவாகவும், ஜனகராஜ் சின்னச்சாமி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து தங்களது இருப்பை இப்படத்தில் நிலைநாட்டினர்.

இப்படத்திற்குண்டான இசையை இளையராஜாவும் பாடல் வரிகளை வாலியும் எழுதினர். இப்படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் இடம்பெற்றன. அதில், 'ஆப்பக்கடை அன்னக்கிளி ஆடி வரும் வண்ணக்கிளி ஓரங்கட்டு ஓரங்கட்டு பொன்னாத்தா’எனும் பாடலும், ’ஆடி மாச காத்தடிக்க வாடி கொஞ்சம் சேத்தணைக்க’ என்னும் பாடலும் இன்றும் பலரால் கிராமங்களில் விஷேசங்களில் ஒலிபரப்பு செய்யப்படுவதுண்டு.

அப்படி இப்படத்தில் இடம்பெற்ற ஆடி மாச காத்தடிக்க வாடி கொஞ்சம் சேத்தணைக்க பாடல் உருவான கதை குறித்து பார்க்கலாம்.

”ஆடி மாச காத்தடிக்க

வாடி கொஞ்சம் சேத்தணைக்க

மானே மாங்குயிலே

அடி நானே ஆண்குயிலே

அடி காஞ்ச மாடு

நல்ல கம்புலதான்

வந்து விழுந்தாப்போல

உன் அன்புல நான்

பொடவையும் பறக்குற

ஆடி மாச காத்தடிக்க

வாடி கொஞ்சம் சேத்தணைக்க

மானே மாங்குயிலே

அடி நானே ஆண்குயிலே

ஈச்சம் ஓலை பாய் விரிச்சு

எழனி வெட்டி தண்ணிகுடிச்சு

கூச்சம் விட்டு கை அணைச்சி

நான் பேச நீ பேச அம்மா

 மாமங்காரன் பாத்தா என்ன

மூச்சு வாங்க வேர்த்தா என்ன

வக்காலி மாமங்காரன் பாத்தா என்ன

மூச்சு வாங்க வேர்த்தா

தொட்டா என்ன பட்டா என்ன

கெட்டா போகும் அம்மியும் அசஞ்சிட”

எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இருவரும் இணைந்து இப்பாடலை பாடி இருப்பார்கள். எஸ்.பி.பி பல திரைப்படங்களில் காட்சிக்கு ஏற்றவாறு தனது குரலை மாற்றியும் பாடியிருப்பார். 80களில் இளையராஜாவின் இசையில் பல பாடல்கள் அவருக்கு அப்படி அமைந்ததுண்டு. எஸ்.பி.பி வித்தியாசமாக பாடிய பாடலை வித்தியாசமாக, அதாவது ஹீரோவின் கெட்டப்பையும் மாற்றி எடுத்தால் மட்டுமே செட் ஆகும்.

ஆனால், அவர் அப்படி பாடிய பாடல் ஒன்றை சாதாரணமாக எடுத்து சொதப்பி வைத்தபோது எஸ்.பி.பி கோபப்பட்ட சம்பவமும் சினிமாவில் நடந்துள்ளது. அதாவது இப்படத்தில் இடம் பெற்ற ஆடி மாசம் காத்தடிக்க என்கிற பாடலுக்கு நீ வித்தியாசமா கிட்டப்பா மாதிரி பாடனும். மாறுவேடத்தில் ஹீரோக்கு இந்த பாடல் அமைந்திருக்கும். எனவே நீ இப்பாடலை வித்தியாசமாக ஜாலியான ஒரு பாடலாக பாட வேண்டும் என சொல்கிறார்.

ஒகே பாடிவிடுவோம் என தனது வழக்கமான குரலை மாற்றி வேறுமாதிரி எஸ்.பி.பி பாடியிருந்தார். இப்பாடல் செம ஹிட். ஆனால், அந்த பாடலில் ரஜினிக்கு எந்த கெட்டப்பும் இல்லமால், சாதரணமாக வந்து நடித்திருப்பார். இதனை பார்த்த எஸ்.பி.பி கோபம் வருத்தம். இதற்காகவா என்னை குரல் மாற்றி பாட சொன்னீர்கள் என ராஜாவிடம் கேட்டாராம்.பாடல் அப்படி கெட்டப் இல்லாமல் வெளிவந்தது இளையராயாவுக்கும் வருத்தமாம்.

எஸ்.பி.பி எவ்வளவு கஷ்டப்பட்டு பாடினேன். இதுக்குதான் என்னை அப்படி பாட வச்சீங்களா? இதுக்கு நான் எப்பவும் போலவே பாடியிருப்பேனே என இயக்குனரிடம் கோபப்பட்டாராம். இதில் என்ன ஒரு சிறப்பு என்றால் எஸ்.பி.பியை இப்பாடலை அதே மாதிரி மறுபடியும் பாட சொன்னால் அது முடியாதாம். 50 சதவீதம் மட்டுமே அதே மாதிரி பாட முடியும் என அவர் ஒரு மேடையில் கூறியிருப்பார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel
பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.