ரிஜெக்ட் ஆன பாட்டுக்காக ரீ-ஷூட் செய்த சசிகுமார்.. ஜில்லா விட்டு ஜில்லா பாடல் பிறந்த கதை
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ரிஜெக்ட் ஆன பாட்டுக்காக ரீ-ஷூட் செய்த சசிகுமார்.. ஜில்லா விட்டு ஜில்லா பாடல் பிறந்த கதை

ரிஜெக்ட் ஆன பாட்டுக்காக ரீ-ஷூட் செய்த சசிகுமார்.. ஜில்லா விட்டு ஜில்லா பாடல் பிறந்த கதை

Malavica Natarajan HT Tamil
Published May 11, 2025 03:10 PM IST

தமின் சினிமாவின் டாப் ரேட்டட் பாடலாசிரியராக தற்போது வலம் வரும் மோகன் ராஜ் சினிமாவில் தன் முதல் பாடல் எப்படி அறிமுகமானது என்பது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அதில் தான் 'ஜில்லா விட்டு ஜில்லா போன' என்ற பாடல் குறித்து பேசியுள்ளார்.

ரிஜெக்ட் ஆன பாட்டுக்காக ரீ-ஷூட் செய்த சசிகுமார்.. ஜில்லா விட்டு ஜில்லா பாடல் பிறந்த கதை
ரிஜெக்ட் ஆன பாட்டுக்காக ரீ-ஷூட் செய்த சசிகுமார்.. ஜில்லா விட்டு ஜில்லா பாடல் பிறந்த கதை

என் முதல் பாட்டை படத்துல தூக்கிட்டாங்க

"'ஜில்லா விட்டு ஜில்லா போன' என்ற என் முதல் பாட்டை எந்த படத்திற்காக எடுத்தோமோ அந்த படத்தின் ஷூட்டை எடுத்து முடிச்சாச்சு. அப்போ படத்துல இருந்து அந்த பாட்ட வேணாம்ன்னு தூக்கிட்டாங்க. அதுக்கு அப்புறம் ஒரு வருஷம் கழிச்சு ஜேம்ஸ் வசந்தன் சார் எனக்கு கால் பண்றாரு. டேய் ஈசன் படத்துல இந்த பாட்டு வருது. சசிக்குமார் சாருக்கு ரொம்ப பிடிச்சிருச்சு அப்படின்னு என்கிட்ட சொன்னாரு. எனக்கு ரொம்ப பயங்கரமான சந்தோஷம்." என தற்போது கோலிவுட்டின் முக்கிய பாடலாசிரயராக மாறிய மோகன் ராஜ் பேசியிருக்கிறார்.

இப்படி ஒரு பாடலாசிரியர மிஸ் பண்ணிருப்போம்

பின் டூரிஸ்ட் ஃபேமில் பற்றிய விளம்பர நிகழ்ச்சியில் பேசிய நடிகரும் இயக்குநருமான சசிகுமார் பாடலாசியர் மோகன் ராஜ் பற்றியும் அவரது முதல் பாடல் பற்றியும் பேசியிருப்பார். " ஈசன் படத்துல ஜில்லா விட்டு ஜில்லா பாட்டு எழுதுனவரு மோகன் ராஜ். அவர் தான் டூரிஸ்ட் ஃபேமிலி படத்துல எல்லா பாட்டும் எழுதிருக்காரு . சீன் ரோல்டன் இப்போ வரைக்கும் சொல்லுவாரு, சார் நீங்க ஈசன் படத்துல மோகன் ராஜ் சாருக்கு வாய்ப்பு கொடுக்கலன்னா நான் எல்லாம், அவர சந்திச்சிருக்கவே மாட்டேன். மோகன் ராஜ் மாதிரியான ஆள்கிட்ட இருந்து வர்ற நல்ல நல்ல பாட்டை எல்லாம் மிஸ் பண்ணிருப்பேன் என சொல்லுவாரு.

பாட்டு செட் ஆகாதுன்னு சொல்லிட்டாங்க

ஈசன் படத்துல இந்த பாட்ட ரிஜெக்ட் பண்ணிட்டோம். ஜில்லா விட்டு ஜில்லா தான் மோகன் ராஜோட முதல் பாட்டு. இந்த பாட்ட ஜேம்ஸ் சார்கிட்ட கேக்கும் போது ஐட்டம் சாங் மாதிரி கேட்டோம். ஆனா இது ஜில்லா விட்டு ஜில்லா போனான்னு வருது. இந்த பாட்டு எல்லாம் செட் ஆகாதுன்னு சொல்லி ரிஜெக்ட் பண்ணிட்டாங்க.

பாட்டு மண்டைக்குள்ளயே இருக்கு

சரி அது என்ன பாட்டுன்னு கேக்கலாமான்னு அவர்கிட்ட கேட்டதும் பாட்ட போட்டு காட்டினாரு. அதுக்கு அப்புறம் அந்த பாட்டு நல்லாருக்கே, நல்லாருக்கேன்னு என் மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு. நான் அப்போ தான் சுப்ரமணியபுரம் படத்துக்காக ஹைதராபாத்துக்கு பிளைட்ல போயிட்டு இருக்கோம் அவார்ட்டு வாங்குறதுக்காக. அப்போ ஜேம்ஸ் சார்கிட்ட இந்த பாட்டு நல்லா இருக்கு சார் நான் வேணும்ன்னா யூஸ் பண்ணிக்கிட்டுமான்னு கேட்டேன். அவரும் ஓகே சொல்லிட்டாங்க.

பாட்டுக்காக மறுபடியும் ஷூட்

அதுக்கு அப்புறம் தான் நாந் கேமரா மேன் எல்லாம் கூப்பிட்டு, இந்த பாட்ட நாம யூஸ் பண்றோம். இது ரொம்ப நல்ல பாட்டு. இத மிஸ் பண்ணக்கூடாதுன்னு சொல்றேன். அவரா எங்க இந்த பாட்ட எடுக்குறது. படம் எல்லாம் எடுத்து முடிச்சிட்டோமேன்னு கேக்குறாரு.

அதுக்கு அப்புறம் தான் இந்த பாட்டுக்காகவே ஒரு சீன் உருவாக்குவோம்ன்னு சொல்லி சுண்டக் கஞ்சி சீன் எல்லாம் ரெடி பண்ணி, ஒரு அக்காவ ரெடி பண்ணி எல்லாத்தையும் கதைக்குள்ள வைக்குறோம். எல்லாம் நாம ரெடி பண்றது தான்னு சொல்லி பாட்ட எடுத்தோம். அந்த பாட்டு நல்லாருக்கு. எனக்கு அந்த பாட்ட இழந்திடக் கூடாது. அதுக்காக சீன கிரியேட் பண்ணி அந்த பாட்ட வச்சோம்" என சசிகுமார் பேசியிருப்பார்.

'ஜில்லா விட்டு ஜில்லா போன' பாடல்

ஈசன் படத்தில் வெளியான ஜில்லா விட்டு ஜில்லா போன எனும் பாடல், சுண்டக் கஞ்சி விற்கும் பெண் ஒருவரின் வாழ்க்கை மற்றும் அவரது வாழ்வில் உள்ள வலிகள் பற்றியும் விளக்கும் வகையில் வரிகள் இருக்கும்.

ஈசன் படம்

நடிகரும் இயக்குநருமான சசிகுமார் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ் அதிரடித் திரைப்படம் ஈசன். இந்த படத்தில் சமுத்திரக்கனி, வைபவ், ஏ.எல். அழகப்பன் மற்றும் அபினயா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். வாய் பேச முடியாத, காது கேட்காத தன் சகோதரியின் வாழ்க்கையை சீரழித்தவர்களை பழிவாங்கும் தம்பியின் கதையை மையமாக வைத்து இந்தப்படம் வெளியானது.