சோசியல் மீடியா முழுவதும் ட்ரெண்ட் ஆகும் டைகர் முத்துவேல் பாண்டியன்.. அதிரடி காட்டும் ஜெயிலர் 2 டீம்..
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் மற்றும் ராம்யா கிருஷ்ணன் நடிக்கும் 'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்- நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் தொடங்கப்பட்டுள்ள ஜெயிலர் 2 படம் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்து உள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மெகாஹிட் அடித்த படம் ஜெயிலர். இந்தப் படத்தில் நடிகர் ரஜினி காந்த், வசந்த் ரவி மற்றும் ரம்யா கிருஷ்ணன், ரித்து உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜெயிலர் 2 படம் வருமா என பலரும் நெல்சனிடமும் ரஜினிகாந்த்திடமும் கேட்டுக் கொண்டே வந்தனர்.
மேலும் படிக்க| அஜித் குமாரை கடவுள் ஆசிர்வதிப்பார்- வாழ்த்திய ரஜினி
ஜெயிலர் 2 அப்டேட்
ஒருவழியாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக ஜெயிலர் 2 படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கூலி படப்பிடிப்பில் நடிகர் ரஜிநிகாந்த் பிஸியாக இருந்த நிலையில் அதை எல்லாம் முடித்துவிட்டு தற்போது 'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் அப்டேட்களையும் கொடுத்தார்.
ஜெயிலர் 2 படப்பிடிப்பு
இதனைத் தொடர்ந்து நேற்று, ஏப்ரல் 11 ஆம் தேதி ஜெயிலர் 2 படக்குழுவினர், கேரளாவில் படப்பிடிப்பை தொடங்கியது. படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்தை ஒரு முறையாவது பார்க்கும் ஆசையில் ஏராளமான ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களை ரஜினிகாந்த் கண்டு கையசைத்து சென்றார்.
இதையொட்டி, 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ரஜினிகாந்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ஒரு புகைப்படத்தில், அவர் தனது காரில் இருந்து ரசிகர்களை நோக்கி கை அசைப்பதும், அவரை நெருங்க முயற்சிக்கும் ரசிகர்களை பாதுகாப்புப் பணியாளர்கள் தடுக்க முயற்சிப்பதும் தெரிகிறது.
நடிகைகளின் போஸ்டால் வைரலாகும் ஜெயிலர் 2
தொடர்ந்து ரம்யா கிருஷ்ணன், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 'படையப்பா' படம் வெளியாகி 26வது ஆண்டுகள் முடிந்த நிலையில் தற்போது 'ஜெயிலர் 2' படப்பிடிப்பில் மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன் இது ஜெயிலர் படத்தின் முதல் நாள் ஷீட்டிங் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து, ரஜினி- ரம்யா கிருஷ்ணன் தம்பதிக்கு மருமகளாக நடித்துள்ள நடிகையும் கேரளாவில் ஷீட்டிங் நடப்பதை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
அப்டேட் தந்த ரஜினி
கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு வந்திருந்த ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயிலர் படம் குறித்தும், கூலி படத்தின் ரிலீஸ் குறித்தும் பேசினார். அத்துடன் நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்திற்கு வாழ்த்துகளும் கூறினார். இந்த வீடியோ அன்றைய தினத்தில் மிகவும் வைரலானது, பின் விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்த ரசிகர்கள் ரஜினிகாந்தைப் பார்த்து 'தலைவர்' என்று கத்தி கோஷமிட்டனர். அவர்களை ரஜினிகாந்த் சிரித்த முகத்துடன் வரவேற்றார்.
ஜெயிலர் 2
கடந்த 2023இல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் ஹிட்டானதுடன், பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டை நடத்தியது. இதையடுத்து ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகமாக ஜெயிலர் 2 உருவாகி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் ஜெயிலர் 2 படம் குறித்து அதிகாரப்பூர்வமாக டீஸர் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து தற்போது ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. ரஜினிகாந்த் 'டைகர்' முத்துவேல் பாண்டியனாகவும், ரம்யாகிருஷ்ணன் அவரது மனைவி விஜயா 'விஜி' பாண்டியனாகவும் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் டைகராக உள்ள முத்துவேல் பாண்டியனின் கதை சொல்லப்படுமா அல்லது ரஜினியின் மகனாக வந்து கடத்தல் வழக்கில் சிக்கியவரை பற்றி சொல்லப்படுமா என்பது தெரியாமல் ரசிகர்களே யூகத்தில் உள்ளனர்.
