ஓடிடியில் வித்தியாசமான படங்களை பார்க்க விருப்பமா? இந்த ஹாரர் த்ரில்லர் படத்தை மிஸ் பண்ணாதீங்க!
ஒரு பள்ளத்தாக்கில் ஆண்களை சிக்க வைத்து, அவர்களை வைத்து கர்ப்பமாகும் பெண்கள் பற்றி தெரியுமா உங்களுக்கு.. இந்த புது ஜானரை வைத்து எடுக்கப்பட்ட ஹாரர் த்ரில்லர் படத்தை மிஸ் பண்ணாம பாருங்க.

ஓடிடிக்கு அவ்வப்போது வித்தியாசமான ஜானர்கள், மாறுபட்ட உள்ளடக்கம் கொண்ட திரைப்படங்கள் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் ஆகி ரசிகர்களை மகிழ்விக்கின்றன. குறிப்பாக ஓடிடி பிரியர்களுக்கு டிஜிட்டல் தளங்களில் வரும் உள்ளடக்கம் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கிறது. ஹாரர் த்ரில்லர்களுக்கு இருக்கும் கிரேஸ் சொல்லி மாளாது.
தீ சீடிங் படம்
ஓடிடி ஹாரர் த்ரில்லர், திகில் அம்சங்களுடன் ஒரு வித்தியாசமான கதையை சுவாரஸ்யமாக காட்டினால், ஓடிடி பார்வையாளர்கள் அதில் மூழ்கிவிடுவார்கள். அப்படிப்பட்ட ஓடிடி ஹாரர் த்ரில்லர் திரைப்படம்தான் 'தி சீடிங்'. ஒரு பள்ளத்தாக்கில் ஆண்களை சிக்க வைத்து, அவர்களை வைத்து கர்ப்பமாகும் பெண்கள் பற்றி பேசுகிறது இந்தப் படம்.
படத்தின் கதை
ஒரு பாலைவனத்தில் ஒரு புகைப்படக் கலைஞர் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஒரு சிறுவன் தென்படுகிறான். அந்த சிறுவனிடம் புகைப்படக் கலைஞர் செல்ல, தன்னுடைய பெற்றோர் தொலைந்துவிட்டதாக அந்த சிறுவன் கூறுகிறான். அழகான பெண் ஒருத்தி அந்த சிறுவனை அழைத்துக்கொண்டு புகைப்படக் கலைஞர் சிறிது தூரம் செல்கிறார்.