Director Manikandan: மணிகண்டன் வீட்டு கொள்ளை விவகாரம் ‘அய்யா; மன்னிச்சிருங்க…’ - தேசிய விருதை திருப்பி வைத்த திருடர்கள்
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உசிலம்பட்டி நகர் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
‘காக்கா முட்டை’ படத்தை இயக்கியதின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குநர் மணிகண்டன். அந்த படத்திற்கு சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
தொடர்ந்து ‘ஆண்டவன் கட்டளை’, ‘ கடைசி விவசாயி’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். இதில் கடைசி விவசாயில் படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
இவருக்கு சொந்த ஊர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி. அங்கு எழில் நகர் என்ற பகுதியில் இவரின் வீடு இருக்கிறது. குடும்பத்தினருடன் இவர் சென்னையில் வசிப்பதால், அவ்வப்போது மட்டும் உசிலம்பட்டி சென்று வருவது வழக்கம்.
இதனிடையே வீடு தொடர்ந்து பூட்டி இருப்பதை பார்த்த கொள்ளையர்கள் கடந்த 8ம் தேதியன்று வீட்டுக்கதவை உடைத்து, பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் நகைகள், கடைசி விவசாயி படத்திற்காக வாங்கிய இரு தேசிய விருதுகள் ஆகியவற்றை அள்ளிச் சென்றனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உசிலம்பட்டி நகர் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் மணிகண்டன் வீட்டில் திருடிய கொள்ளையர்கள் தாங்கள் எடுத்து சென்ற தேசிய விருதுகளை மீண்டும் மணிகண்டன் வீட்டில் வைத்து விட்டு அய்யா... எங்களை மன்னித்து விடுங்கள்.. உங்களது உழைப்பு உங்களுக்கே என்று பேப்பரில் எழுதி வைத்து விட்டு அதனை பாலிதீன் பையில் தொங்க விட்டு சென்றனர். தகவறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த பதக்கங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாபிக்ஸ்