Game Changer OTT: ஓடிடி ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் செய்த கேம் சேஞ்சர்.. தியேட்டரில் விட்டதை ஓடிடியில் பிடிக்குமா?
Game Changer OTT: ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடித்த கேம் சேஞ்சர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Game Changer OTT: குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்த 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக அறியப்படும் ஷங்கர் முதல் முதலில் நேரடி தெலுங்கு படமாக கேம் சேஞ்சர் படத்தை இயக்கியுள்ளார். இதனால், இந்தப் படத்தின் மீது தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு மக்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
கேம் சேஞ்சர்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு தயாரித்த 'கேம் சேஞ்சர்' படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோர் கதாநாயகிகளாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில், ஜெயராம், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கேம் சேஞ்சருக்கான பிரம்மாண்ட பட்ஜெட்
பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஜனவரி 10 அன்று பொங்கல் பண்டிகைக்கு வெளியான 'கேம் சேஞ்சர்' படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சுமார் ரூ. 350 முதல் ரூ. 450 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியைப் பெறவில்லை. சுமார் ரூ. 180 கோடி வசூல் மட்டுமே ஈட்டியுள்ளது. இதனால் தயாரிப்பாளர் தில் ராஜுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி
இருப்பினும், 'கேம் சேஞ்சர்' படத்தின் ஓடிடி வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஓடிடி வெளியீட்டு தேதி குறித்து பல வதந்திகளும் தொடர்ந்து பரப்பப்பட்டு வந்தன. ஆனால், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஓடிடி வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியீடு
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 'கேம் சேஞ்சர்' படம் வெளியாக உள்ளது. இந்தப் படம் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் இந்தப் படம் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10 அன்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், ஒரு மாதத்திற்குள்ளாகவே (27 நாட்களில்) ஓடிடியில் வெளியாகிறது.
3 நாட்களில் ஓடிடியில்
இன்னும் மூன்று நாட்களுக்குள் ராம் சரணின் 'கேம் சேஞ்சர்' படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. அமேசான் பிரைம், இந்த அறிவிப்பை சர்ப்ரைஸாக அறிவித்துள்ளது. திரையரங்குகளில் தோல்வியடைந்த 'கேம் சேஞ்சர்' படம், ஓடிடியில் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இணையத்தில் லீக்
முன்னதாக இந்தப் படம் வெளியான முதல் நாளே ஹெச்டி பிரிண்ட் லீக் ஆனது. இதுகுறித்து படக்குழு காவல் நிலையத்தில் புகாரளித்தது. மேலும், படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னதாகவே ஒரு குழு தங்களை மிரட்டி வந்ததாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்