தமிழ் செய்திகள்  /  Entertainment  /  The Ott Release Date Of Premalu Has Been Announced

Premalu OTT Release :வெயிட் பண்ணுங்க.. ஓடிடி-யில் வெளியாகிறது பிரேமலு.. எந்த ஓடிடி.. எப்போ ரிலீஸ் தெரியுமா? இதோ பாருங்க!

Divya Sekar HT Tamil
Mar 14, 2024 12:57 PM IST

மலையாளத்தில் இந்த ஆண்டு வெளியாகி 110 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ள பிரேமலு திரைப்படம் தனது ஓடிடி விற்பனையை வெற்றிகரமாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழில் இன்று வெளியாகிறது பிரேமலு
தமிழில் இன்று வெளியாகிறது பிரேமலு

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது கைவசம் பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் இல்லாததால் பிரேமலு திரைப்படத்தை தமிழில் டப் செய்து ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டுள்ளது. இந்த பிரேமலு படத்தை மார்ச் 15 ஆம் தேதி அதாவது நாளை முதல் தமிழ்நாட்டின் அனைத்து திரையரங்குகளிலும் தமிழ் டப்பிங்கில் களம் இறக்க உள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் தமிழ் ட்ரைலர் நேற்று 11 மணிக்கு வெளியானது.

மலையாள சினிமா தற்போது இந்திய முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மலையாள சினிமா என்றாலே ஃபீல் குட் மூவிஸ் என்ற பிம்பத்தை சமீப காலமாக உருவாக்கி வருகிறது.மலையாளத் படங்கள் வித்தியாசமான கதையை கொடுத்து தமிழ் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. மலையாள திரைப்படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

பிரேமம், ஹிருதயம்,மின்னல் முரளி, ஐயப்பனும் கோஷியும் என பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம். தற்போது சமீபத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த படங்களின் வரிசையில் பிரேமலு உள்ளது.இப்படத்தை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கிரீஷ் ஏ.டி இயக்கத்தில் மமிதா பைஜு, நஸ்லென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் தான் பிரேமலு. இப்படம் நடிகர் ஃபகத் ஃபாசில் தயாரிப்பில் உருவானது. இந்த படம் கடந்த மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

மலையாள திரைப்படமான தண்ணீர் மாத்தன் தினங்கள், சூப்பர் சரண்யா போன்ற ஹிட் படங்களை இயக்கியவர் தான் இயக்குநர் கிரீஷ் ஏ.டி. தற்போது பிரேமலு படத்தின் மூலம் மீண்டும் மக்கள் மனதை கவர்ந்து உள்ளார்.ரோம்-காம் வடிவில் உருவாகி உள்ள இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது.

நஸ்லென் கே. கஃபூர் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். தற்போதைய சினிமா உலகில் வெளியாகியுள்ள வித்தியாசமான காதல் திரைப்படம் பிரேமலு.

பிரேமலு படம் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது. இந்த படத்தை நகைச்சுவையையும்,உணர்வு பூர்வமான படமாகவும் கிரிஷ் ஏ.டி நமக்கு கொடுத்து இருப்பார். இப்படம் ஒரு தரமான சினிமா அனுபவத்தை நமக்கு தருகிறது. இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் எளிமையான அதே சமயம் வசீகரிக்கும் கதை களத்தை கொண்டிருப்பது. அதேசமயம் நகைச்சுவையுடன் நல்ல காதல் கதையையும் கொண்டிருப்பது வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. நஸ்லென் கஃபூர், மமிதா பைஜு ஆகியோருக்கு இடையில் நடக்கும் காதல் பார்வையாளர்களுக்கு புதுவித அனுபவத்தையும், பல இடங்களில் நகைச்சுவை ஏற்படுத்தி சிரிப்பலையை வர வைக்கிறது.

இப்படத்தில் மமிதா பைஜூவின் கதாபாத்திரம் ரீனு. தனது இலட்சியங்களுக்கும் எதிர்பாராத காதலுக்கும் இடையில் சிக்கி தவிக்கும் பெண்ணாக நடித்து அசத்தி இருப்பார். அதேபோல சச்சினாக நஸ்லன் கஃபூர் நடித்து நிறைய இடங்களில் அனைவரது பாராட்டை பெறுகிறார். இவரது கேரக்டர் இயல்பான அதே சமயம் அப்பாவித்தனமான போக்கை கொண்டு உள்ளது.

சங்கீத் பிரதாப்பின் அமல் டேவிஸின் கதாபாத்திரம் கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. ஒரு மறக்க முடியாத சினிமா அனுபவமாக இந்தப் படம் கண்டிப்பாக இருக்கும். பிரேமலு மலையாள சினிமாவில் வெளியாகி உள்ள மற்றொரு சிறந்த படமாக அமைந்துள்ளது.

மலையாள திரைப்படமான மஞ்சுமெல் பாய்ஸ் படத்தைத் தொடர்ந்து மலையாளத்தில் இந்த ஆண்டு வெளியாகி 110 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ள பிரேமலு திரைப்படம் தனது ஓடிடி விற்பனையை வெற்றிகரமாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

வரும் மார்ச் 29ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் பிரேமலு திரைப்படம் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியாக உள்ளதாக தெரிகிறது. இதனால் தான் அவசர அவசரமாக பிரேமலு தமிழ் டப்பிங்கை முடித்த நிலையில் மார்ச் 15ஆம் தேதி அதாவது நாளை தியேட்டரில் தமிழில் பிரேமலு வெளியாகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்