Oscar Award 2025: ரத்தாகிறதா ஆஸ்கார் விருது.. பற்றி எரியும் காட்டுத் தீயால் கேள்விக் குறியாகும் விழா ஏற்பாடு!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Oscar Award 2025: ரத்தாகிறதா ஆஸ்கார் விருது.. பற்றி எரியும் காட்டுத் தீயால் கேள்விக் குறியாகும் விழா ஏற்பாடு!

Oscar Award 2025: ரத்தாகிறதா ஆஸ்கார் விருது.. பற்றி எரியும் காட்டுத் தீயால் கேள்விக் குறியாகும் விழா ஏற்பாடு!

Malavica Natarajan HT Tamil
Jan 15, 2025 03:25 PM IST

Oscar Award 2025: லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் பற்றி எரியும் காட்டுத் தீயின் காரணமாக இந்த ஆண்டு நடைபெற இருந்த ஆஸ்கார் விருது விழா ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Oscar Award 2025: ரத்தாகிறதா ஆஸ்கார் விருது.. பற்றி எரியும் காட்டுத் தீயால் கேள்விக் குறியாகும் விழா ஏற்பாடு!
Oscar Award 2025: ரத்தாகிறதா ஆஸ்கார் விருது.. பற்றி எரியும் காட்டுத் தீயால் கேள்விக் குறியாகும் விழா ஏற்பாடு! (REUTERS)

Oscar Award 2025: சினிமாத் துறையினருக்கு வழங்கப்படும் உயிரிய விருதுகளில் முக்கியமானதாகவும் மதிப்பு மிக்கதாகவும் கருதப்படுவது தான் ஆஸ்கார். இந்த விருது சினிமாவிலுள்ள பல துறையில் பணியாற்றும் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ

இந்நிலையில், மதிப்புமிக்க ஆஸ்கார் 2025 விருது வழங்கும் விழா இந்த ஆண்டு நடைபெறுமா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ பரவி வருகிறது. காட்டுத்தீ வேகமாக பரவி நூற்றுக்கணக்கான வீடுகளை எரித்து வருகிறது.

இந்த கொடிய பேரழிவில் ஏற்கனவே 25 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழா நடைபெறுவது சந்தேகம்தான். 9 ஆண்டுகளில் முதல் முறையாக 2025 ஆஸ்கர் விருதுகள் ரத்து செய்யப்படலாம் என அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

ஆஸ்கார் ரத்தாக வாய்ப்பு

தி சன் அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஆஸ்கர் விழா ரத்து செய்யப்படலாம் என்றும், காட்டுத்தீயால் மக்கள் ஆழ்ந்த சோகத்தில் இருக்கும் நேரத்தில் ஆஸ்கார் விழாவைக் கொண்டாடுவது சரியல்ல என்று அமைப்பாளர்கள் கருதுகின்றனர்.

"பல லாஸ் ஏஞ்சல்ஸ் குடியிருப்பாளர்கள் மனமுடைந்த நேரத்திலும், அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நேரத்திலும் கொண்டாடுவது சரியல்ல என்று அகாடமி வாரியம் நினைக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் காட்டுத்தீயின் தீவிரம் குறையும். இருந்தாலும் அந்த வலி இன்னும் சில மாதங்களுக்கு நகரத்தில் தொடரும்.

அதனால்தான் மக்களுக்கு உதவுவதில் தான் இப்போது கவனம் செலுத்த வாய்ப்புள்ளது. இதற்கு நிதி திரட்டுவது சரியான வாய்ப்பாக இருக்கும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் முடிவு

2021 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் வெடித்த நேரத்தில் கூட, ஆஸ்கர் விழா இரண்டு மாதங்கள் தாமதமானது, ஆனால் ரத்து செய்யப்படவில்லை. தற்போது அகாடமி விருது அதிகாரிகளாக இருக்கும் நட்சத்திரங்கள் டாம் ஹாங்க்ஸ், எம்மா ஸ்டோன், மெரில் ஸ்ட்ரீப் மற்றும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஆகியோர் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயின் நிலைமைகளை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இந்த கொடூரமான பேரழிவை எதிர்கொள்ளும் நிலையில் ஆஸ்கர் விழாவை நடத்துவதா இல்லையா என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

ஆஸ்கார் பரிந்துரைக்கு அவாசம்

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ காரணமாக ஆஸ்கர் 2025 பரிந்துரைகள் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வாக்களிப்பு காலத்தையும் அகாடமி ஜனவரி 17 வரை நீட்டித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய ஜனவரி 23-ம் தேதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடக்குமா இல்லையா என்பது இப்போது உறுதியாகத் தெரியவில்லை. ஆஸ்கர் 2025 விருது வழங்கும் விழா மார்ச் 3 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

25 பேர் உயிரிழப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் ஏராளமான வீடுகள் எரிந்து நாசமாகின. சில ஹாலிவுட் நடிகர்களின் வீடுகளும் காட்டுத்தீயில் எரிந்து சாம்பலாயின. மாண்டி மூர், பாரிஸ் ஹில்டன் உள்ளிட்ட சில ஹாலிவுட் பிரபலங்கள் வீடுகளை இழந்துள்ளனர். இந்த காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காணாமல் போன சிலரை தேடும் பணியும் நடந்து வருகிறது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.