தமிழ் சினிமாவில் அடுத்த அதிர்ச்சி.. ஒரு கிடாயின் கருணை மனு இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார்!
தமிழ் சினிமாவில் அடுத்த அதிர்ச்சி.. ஒரு கிடாயின் கருணை மனு இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார்!

ஒரு கிடாயின் கருணைமனு, சத்திய சோதனை ஆகிய படங்களின் இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார். அவருக்கு வயது 41.
2017ஆம் ஆண்டு வெளியான, ஒரு கிடாயின் கருணை மனு என்னும் திரைப்படத்தை எழுதி இயக்கியவர், இயக்குநர் சுரேஷ் சங்கையா. இவர் காக்கா முட்டை திரைப்படப் புகழ் இயக்குநர் மணிகண்டனின் உதவி இயக்குநர் ஆவார். ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படத்தில் நடிகர் விதார்த்தும், அறிமுக நாயகி ரவீனா ரவியும் நடித்து இருந்தனர். இறைவனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த கொண்டுசெல்லப்படும் ஆட்டின் பார்வையில் இருந்து கதை சொல்லி, தனது முதல் படத்திலேயே அசத்தியிருப்பார். இப்படம் ராஜபாளையம் மற்றும் அருப்புக்கோட்டை சுற்றுவட்டாரப்பகுதி மக்களின் வாழ்வியலை நகைச்சுவை கலந்து அப்படியே சொன்னதால், சி சென்டரில் நன்கு ஓடியது.
பிரேம்ஜியை ஹீரோவாக்கியவர்:
அடுத்து இவர் இரண்டாவதாக இயக்கி சோனி லிவ் ஓடிடி தளத்தில் 2023-ல் வெளியான திரைப்படம் தான், சத்திய சோதனை. ஒரு குக்கிராமத்தில் நடக்கும் கொலையினை, அந்த கிராமத்தில் அமைந்துள்ள காவல் நிலைய காவலர்கள் எப்படி விசாரிக்கின்றனர் என்பதை நகைச்சுவை கலந்து சொன்ன படம் தான், சத்திய சோதனை. இப்படமும் பலரால் பார்த்து ரசிக்கப்பட்டது. இப்படத்தில் பிரேம்ஜி நாயகனாக நடித்து இப்படமும் நல்ல வரவேற்பினைப் பெற்றது.