தமிழ் செய்திகள்  /  Entertainment  /  The Much Awaited Premalu Tamil Trailer Releasing Today At 11 Am

Premalu Tamil Trailer : காத்திருந்தது போதும்.. தமிழில் இன்று வெளியாகிறது பிரேமலு ட்ரைலர்.. எத்தனை மணிக்கு தெரியுமா?

Divya Sekar HT Tamil
Mar 13, 2024 10:05 AM IST

Premalu Tamil Trailer : காதலை மையமாக வைத்து உருவாகி வெற்றி நடைபோடும் மலையாள திரைப்படமான பிரேமலு படம் தமிழில் மார்ச் 15ஆம் தேதி வெளியாகிறது.

தமிழில் இன்று வெளியாகிறது பிரேமலு ட்ரைலர்
தமிழில் இன்று வெளியாகிறது பிரேமலு ட்ரைலர்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடிகர்களின் புது படங்கள் இல்லாத காரணத்தினால் இந்த பிரேமலு திரைப்படத்தை தமிழில் டப் செய்து ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டுள்ளது.

பிரேமலு படத்தை மார்ச் 15 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் அனைத்து தியேட்டர்களிலும் தமிழ் டப்பிங்கில் களம் இறக்க உள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் தமிழ் ட்ரைலர் இன்று 11 மணிக்கு வெளியாகிறது.

மலையாள சினிமா தற்போது இந்திய முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மலையாள சினிமா என்றாலே ஃபீல் குட் மூவிஸ் என்ற பிம்பத்தை சமீப காலமாக உருவாக்கி வருகிறது.மலையாளத் படங்கள் வித்தியாசமான கதையை கொடுத்து தமிழ் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. மலையாள திரைப்படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

பிரேமம், ஹிருதயம்,மின்னல் முரளி, ஐயப்பனும் கோஷியும் என பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அப்படி தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த படங்களின் வரிசையில் சமீபத்தில் வெளியாகி மக்கள் மனதை கொள்ளையடித்த படம் பிரேமலு.

இயக்குனர் கிரீஷ் ஏ.டி இயக்கத்தில் மமிதா பைஜு, நஸ்லென் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள படம் பிரேமலு. மலையாள பிரபல நடிகர் ஃபகத் ஃபாசில் தயாரிப்பில் உருவான இந்த படம் கடந்த மாதம் 9 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.

தண்ணீர் மாத்தன் தினங்கள் மற்றும் சூப்பர் சரண்யா போன்ற வெற்றி படங்களை இயக்கியதற்காக புகழ் பெற்ற இயக்குநர் தான் கிரீஷ் ஏ.டி. இந்த படத்தின் மூலம் மீண்டும் பார்வையாளர்களின் இதயங்களைக் கவர்ந்து உள்ளர் இயக்குநர் கிரீஷ். ரோம்-காம் வடிவில் உருவாகி உள்ள இந்த மலையாளத் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது.

நஸ்லென் கே. கஃபூர் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். பிரேமலு படம் தற்போதைய சினிமா உலகில் வெளியாகியுள்ள வித்தியாசமான காதல் திரைப்படம் ஆகும்.

இப்படம் பல இளைஞர்களின் மனதை கட்டி இழுதுள்ளது. கிரிஷ் ஏ.டி.யின் திறமையான இயக்கம் இந்த படத்தை நகைச்சுவையையும், இதய பூர்வமான படமாகவும் ஒரு தரமான சினிமா அனுபவத்தை நமக்கு தருகிறது.எளிமையான அதே சமயம் வசீகரிக்கும் கதை களத்தை கொண்டிருக்கும் பிரேமலு படம் நகைச்சுவையுடன் நல்ல காதல் கதையையும் கொண்டிருப்பது வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. நஸ்லென் கஃபூர் மற்றும் மமிதா பைஜு ஆகியோருக்கு இடையில் நடக்கும் அழகான காதல் ரசிகர்களுக்கு புதுவித சினிமா அனுபவத்தையும், அதே சமயம் பல இடங்களில் சிரிப்பையும் வர வைக்கிறது.

தனது இலட்சியங்களுக்கும் எதிர்பாராத காதலுக்கும் இடையில் சிக்கி தவிக்கும் ரீனுவாக மமிதா பைஜூவின் கதாபாத்திரம் கவனத்தை பெறுகிறது. இதனுடன், நஸ்லன் கஃபூர் சச்சினாக நிறைய இடங்களில் கைதட்டல்களை பெறுகிறார். அவரது கதாபாத்திரம் இயல்பான, அதே சமயம் அழகையும் அப்பாவித்தனத்தையும் கொண்டு உள்ளது.

சங்கீத் பிரதாப்பின் அமல் டேவிஸின் கதாபாத்திரம் கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. கிரீஷ் ஏ.டி.யின் இயக்கத்தில் உருவாகி இயக்கும் இந்த பிரேமலு மலையாள சினிமாவில் வெளியாகி உள்ள மற்றொரு சிறந்த படமாக அமைந்துள்ளது. உண்மையில், இந்தப் படம் ஒரு மறக்க முடியாத சினிமா அனுபவமாக இருக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்