மோசமான நடிகர்களில் முக்கியமானவர்.. மொக்கை நடிகர் விருது.. நம்ம திவாகருக்கே டஃப்.. டிரம்ப் பற்றி தெரியாத சுவாரஸ்யம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மோசமான நடிகர்களில் முக்கியமானவர்.. மொக்கை நடிகர் விருது.. நம்ம திவாகருக்கே டஃப்.. டிரம்ப் பற்றி தெரியாத சுவாரஸ்யம்

மோசமான நடிகர்களில் முக்கியமானவர்.. மொக்கை நடிகர் விருது.. நம்ம திவாகருக்கே டஃப்.. டிரம்ப் பற்றி தெரியாத சுவாரஸ்யம்

Marimuthu M HT Tamil
Nov 05, 2024 03:50 PM IST

மோசமான நடிகர்களில் முக்கியமானவர்.. மொக்கை நடிகர் விருது.. டிரம்ப் பற்றி தெரியாத சுவாரஸ்யமான தகவலை அறிந்துகொள்வோம்.

மோசமான நடிகர்களில் முக்கியமானவர்.. மொக்கை நடிகர் விருது.. நம்ம திவாகருக்கே டஃப்.. டிரம்ப் பற்றி தெரியாத சுவாரஸ்யம்
மோசமான நடிகர்களில் முக்கியமானவர்.. மொக்கை நடிகர் விருது.. நம்ம திவாகருக்கே டஃப்.. டிரம்ப் பற்றி தெரியாத சுவாரஸ்யம்

உலகின் பெரிய அண்ணனான அமெரிக்காவின் இந்த தேர்தலை உலகமே உற்று நோக்குகிறது. குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் இந்த ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அமெரிக்க நேரப்படி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 5 மணிக்கு மேல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகும். வாக்காளர்களின் கருத்துகளும் வெளியாகும்.

டிரம்ப் களத்தில் உள்ள வேட்பாளர்களில் மிகவும் செல்வாக்கு மிக்கவர். அரசியலில் தனது அடையாளத்தை உருவாக்குவதற்கு முன்பு, அவர் பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆம். அவர் விளம்பரங்களில் கூட நடித்துள்ளார். தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களைத் தயாரித்துள்ளார் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

அரசியல்வாதி டிரம்பின் யாரும் அறியா சினிமா பக்கம்:

2004ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை, டிரம்ப் தி அப்ரண்டிஸ் மற்றும் தி செலிபிரிட்டி அப்ரண்டிஸ் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரித்து தொகுத்து வழங்கினார், டொனால்ட் டிரம்ப். அப்படியானால் டிரம்ப் நடித்த படங்கள் என்னென்ன? அது குறித்து அறிந்துகொள்வோமோ?.

1989ஆம் ஆண்டில், டொனால்ட் டிரம்ப் அவர்கள், கோஸ்ட் கான்ட் டூ இட், ஹோம் அலோன் 2 போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்தார். லாஸ்ட் இன் நியூயார்க், தி லிட்டில் ராஸ்கல்ஸ், அக்ராஸ் தி சீ ஆஃப் டைம், எடி, தி அசோசியேட், 54, செலிபிரிட்டி, நியூயார்க் - ஆவணப்படம், ஜூலாண்டர், இரண்டு வார அறிவிப்பு, லீ சர்க்யூட்; சொர்க்கத்தில் ஒரு மேசை,

தி ஜெபர்சன், ஐ வில் டேக் மேன் ஹீடன், செயின்ட் அண்ட் கிரீவ்ஸ், தி ஃப்ரெஷ் ஃபிரெண்ட்ஸ் ஆஃப் பெல் ஏர், தி நன்னி, சடன் சூசன், தி டியூ கேரி ஷோ, நைட்மேன், ஹோவர்ட் ஸ்டெம், ஸ்பின் சிட்டி, செக்ஸ் அண்ட் தி சிட்டி, தி ஜாப் மற்றும் பல டஜன் கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் டிரம்ப் தொகுத்து வழங்கியுள்ளார்.

டிரம்ப் பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார். பீட்சா ஹட், மெக்டொனால்ட்ஸ், பெப்சி, மெஸ்ஸி, ஓரியோ உள்ளிட்ட பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.

மோசமான நடிகருக்கான தொடர் விருதுகளை வென்றவர்

இந்திய திரைப்பட விழாக்கள் மற்றும் விருது வழங்கும் விழாக்களில் மோசமான நடிகருக்கு விருது வழங்கும் முறை இல்லை. ஆனால், ஹாலிவுட்டில் அந்த பாரம்பரியம் இருக்கிறது.

சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் என்னும் வகையான விருதுகளைத் தவிர, மோசமான நடிகர், மோசமான துணை நடிகர், மோசமான நடிகர் விருது ஹாலிவுட்டில் வழங்கப்படுகிறது. இதேபோல், டொனால்ட் டிரம்பும் சிறந்த நடிகருக்கு பதிலாக மோசமான நடிகருக்கான விருதுகளை தொடர்ச்சியாகப் பெற்றுள்ளார்.

1990ஆம் ஆண்டு வெளியான கோஸ்ட் கான்ட் டூ இட் படத்தில் நடித்த டொனால்ட் டிரம்ப், கோல்டன் ராஸ்பெர்ரி விருதுகளில் மொக்கையான துணை நடிகருக்கான விருதை வென்றார். மொக்கையான நடிகர் பட்டியலிலும் அவர் பரிந்துரைக்கப்பட்டார். 2019ஆம் ஆண்டில், டெத் ஆஃப் எ நேஷன் மற்றும் பாரன்ஹீட் ஆகியப் படங்களில் நடித்ததற்காக மொக்கை நடிகருக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டது. இப்படத்தில் இவர் நடித்ததற்காக, மோசமான திரை காம்போ விருதையும் டிரம்ப் வென்றார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.