தக் லைஃப் படத்தின் சட்டவிரோத வெளியீட்டிற்கு தடை.. பிரச்சனைக்கு மத்தியில் உத்தரவிட்ட சென்னை ஐகோர்டு..
தக் லைஃப் படத்தை இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாயகன் (1987) படத்திற்குப் பிறகு சுமார் நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் கமல் ஹாசனும், மணிரத்னமும் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிரடி காட்சிகளுடன், கமலின் ரொமான்ஸ் காட்சிகளும் இடம்பிடித்த ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை கூட்டியுள்ள நிலையில், தக் லைஃப் படம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு
ஏற்கனவே, கர்நாடக மக்களிடம் கமல் மன்னிப்பு கேட்காததால் அங்கு படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு, வரும் ஜூன் 10ஆம் தேதி அடுத்தகட்ட விசாரணை நடைபற உள்ளது. இதனால். தக் லைஃப் படக்குழுவின் ஒவ்வொரு அசைவும் மக்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
அந்த சமயத்தில் தான் தக் லைஃப் படத்தின் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தது. அந்த வழக்கில், படத்தை இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிடக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தியது. இதனை ஏற்ற சென்ன உயர் நீதிமன்றம் படத்தை இணையத்தில் சட்ட விரோதமாக வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.