Top 5 Serials: தமிழில் வெளியாகும் டாப் 5 சீரியல் இதுதான்.. வெளியானது இந்த வார டிஆர்பி லிஸ்ட்..
Top 5 Serials: தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மனம் கவர்ந்த டாப் 5 சீரியல்களின் பட்டியலும் சீரியல்கள் பெற்ற புள்ளிகளும் வெளியாகியுள்ளது.

Top 5 Serials: திரைப்படங்களைக் காட்டிலும் அதிகமான இல்லத்தரசிகளை ரசிகர்களாக கொண்டது டிவி சீரியல்கள்தான். ஒவ்வொரு சீரியலும் அதன் கதை, கதாபாத்திரங்களின் அமைப்பு, நடிகர்களின் நடிப்புத் திறன் ஆகியவற்றால் மட்டுமே சிறப்பு பெறுகின்றன.
இவை அனைத்தும் சரியாக இருந்து ஒரு நேர்த்தியான படைப்பாக இருந்தால் மட்டுமே மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. தமிழ் சீயல்களுக்கான சேனல்களை பொறுத்த வரை, சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி ஆகிய சேனல்கள் முன்னணி வகிக்கின்றன. இதில் ஓடும் பிரைம் டைம் சீரியல்களே அதிகம் பேரால் பார்க்கப்படுகிறது.
சீரியல் டிஆர்பி
ஒவ்வொரு வாரமும் டிவி சீரியல்கள் எந்த அளவுக்கு ஓடியுள்ளது என டி.ஆர்.பி ரேட்டிங் வெளியாகும். கடந்த வாரம் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட சீரியல் மக்கள் மத்தியில் பெற்ற வரவேற்புகளின் அடிப்படையில் டிஆர்பி புள்ளிப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில், முதல் 5 இடங்களைப் பெற்ற சீரியல்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.
1. சிங்கப்பெண்ணே
சன் டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சிங்கப் பெண்ணே சீரியல் டிஆர்பியில் 9.92 புள்ளிகள் பெற்று டாப் 10 சீரியல்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மகேஷ் தன் காதலை ஆனந்தியிடம் வெளிப்படுத்திய பின் பல எதிர்பாராத ட்விஸ்ட்டுகள் சீரியலில் இருந்ததால் இந்த சீரியல் தொடர்ந்து சில வாரங்களாக முன்னணியில் இருக்கிறது.
2. மூன்று முடிச்சு
சன் டிவியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் சீரியலான மூன்று முடிச்சு, டாப் 10 டிஆர்பி பட்டியலில் 2ம் இடம் பிடித்துள்ளது. இது 9.73 புள்ளிகள் பெற்றுள்ளது.
3. கயல்
சன் டிவியில் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் கயல். சில மாதங்களாக டிஆர்பியில் முதல் இடத்தில் இருந்து வந்த கயல் தற்போது அதன் புள்ளிகள் எல்லாம் குறைந்து டாப் 10 பட்டியலில் 9.28 புள்ளிகளுடன் 3ம் இடம் பிடித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே டாப் 1 இடத்தை தக்க வைத்திருந்த கயல் சீரியல், கயலின் கல்யாணத்திற்கு பின் பெரிதாக மக்களால் ஈர்க்கப்படாமல் உள்ளது.
4. மருமகள்
சன் டிவியில், இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் மருமகள். இந்த மருமகள் சீரியல் டிஆர்பியில் 8.46 புள்ளிகளைப் பெற்று 4ம் இடத்தில் உள்ளது.
5. சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் 8.14 டிஆர்பி புள்ளிகள் பெற்று டாப் 10 பட்டியலில் 5ம் இடம் பிடித்துள்ளது. சில வாரங்களாகவே டாப் 6க்கு மேல் இடம் பிடித்து வந்த இந்த சீரியல், மீனாவிற்கு எதிராக களமிறங்கிய நபராலும், ரோஹினி எப்போது சிக்குவார் என்ற எதிர்பார்ப்பிலும் சில வாரங்களாக நல்ல ரேட்டிங்கை பெற்றுள்ளது.
என்னதான், மற்ற சேனல்களில் மக்களைக் கவரும் பல சீரியல்கள், குடும்ப நாடகங்களாகவும், நண்பர்களை சுற்றியும், புராண கதைகளையும் கொடுத்தாலும் டாப் 3 இடங்களை பெரும்பாலும் சன் டிவி தான் பிடிக்கிறது. அதற்கு அடுத்தபடியாக, விஜய் டிவியில் வெளியாகும் சில சீரியல்கள் டிஆர்பி புள்ளிப் பட்டியலில் ஏறி இறங்கி வருகின்றன.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்