Alya Sanjeev: ஒரு வார பிரேக்கப்.. அவ்வளவு பெரிய சண்டை.. ஆல்யாவுக்கு வீசிங்கே.. சீரியல விட்டே தூக்க வச்சிட்டா’ - சஞ்சீவ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Alya Sanjeev: ஒரு வார பிரேக்கப்.. அவ்வளவு பெரிய சண்டை.. ஆல்யாவுக்கு வீசிங்கே.. சீரியல விட்டே தூக்க வச்சிட்டா’ - சஞ்சீவ்

Alya Sanjeev: ஒரு வார பிரேக்கப்.. அவ்வளவு பெரிய சண்டை.. ஆல்யாவுக்கு வீசிங்கே.. சீரியல விட்டே தூக்க வச்சிட்டா’ - சஞ்சீவ்

Kalyani Pandiyan S HT Tamil
Jan 20, 2025 07:27 PM IST

Alya Sanjeev: ஆலியா தொடர்ந்து அழுது கொண்டே இருந்த காரணத்தால், அவருக்கு வீசிங்கே வந்து விட்டது. அதனை தொடர்ந்து இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த நேரத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தில் வேறு நடிகர்களை நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடந்தன.

Alya Sanjeev: ஒரு வார பிரேக்கப்.. அவ்வளவு பெரிய சண்டை.. ஆல்யா வீசிங்.. சீரியல விட்டே தூக்க வச்சிட்டா’ - சஞ்சீவ்
Alya Sanjeev: ஒரு வார பிரேக்கப்.. அவ்வளவு பெரிய சண்டை.. ஆல்யா வீசிங்.. சீரியல விட்டே தூக்க வச்சிட்டா’ - சஞ்சீவ்

சஞ்சீவ் பேட்டி

சஞ்சீவ் பேசும் போது, ‘நாங்கள் காதலித்துக் கொண்டிருந்த பொழுது எங்களுக்குள் ஒரு பிரச்சினை வந்தது. அந்தப் பிரச்சினை ஒரு கட்டத்தில் பெரிய பிரளயமாக மாறியது; அதற்கு சில காரணங்கள் இருந்தன.

அந்த பிரச்சினையை மனதில் வைத்துக்கொண்டு இவர், ராஜா ராணி சீரியலில் நான் நடித்தால், அவர் நடிக்க மாட்டேன் என்று பட குழுவிடம் சொல்லிவிட்டார்; அத்துடன் அவர்களது வீட்டிலிருந்து பெற்றோரை அழைத்து வந்து பெரிய பிரச்சினையும் செய்தார். இதனால், ராஜா ராணி சீரியலே நின்று போகும் நிலைமை உருவானது.

வீசிங் வந்தது

அந்த பிரச்சினையின் போது ஆலியா தொடர்ந்து அழுது கொண்டே இருந்த காரணத்தால், அவருக்கு வீசிங்கே வந்து விட்டது. அதனை தொடர்ந்து இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த நேரத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தில் வேறு நடிகர்களை நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடந்தன. எனக்குத் தெரிந்த நபர்களே என்னுடைய கதாபாத்திரத்திற்கு என் கண்முன்னே ஆடிஷனுக்கு சென்றார்கள்.

இதையடுத்து ஒரு நாள் ஆலியாவே சமாதானமாகி, என்னுடைய வாழ்க்கையை ஏன் கெடுக்க வேண்டும் என்று சொல்லி, போனால் போகட்டும் என்று நடிக்க சொன்னார்கள். அந்த சமயத்தில் நாங்கள் முழுமையாக பிரேக்கப்பில் இருந்தோம்; தினமும் வருவோம்; வேலை முடித்து அவர் அவரது ரூமிற்கு செல்வார்; நான் என்னுடைய ரூமிற்கு செல்வேன்; இடையே பேசமாட்டோம்.

அந்த பிரச்சினை அப்படியே முடிந்தது; அதன் பின்னர் ஆலியாவே என்னுடைய நண்பர் மூலமாக என்னிடம் பேச வேண்டும் என்ற தூதுவிட்டு, மீண்டும் என்னுடன் இணைந்து கொண்டார்; அவரால் என்னை விட்டுப் பிரிந்து இருக்க முடியவில்லை. இவையனைத்தும் ஒரு வாரத்தில் நடந்து முடிந்து விட்டது’ என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.