இந்திய வரலாற்றுலயே இப்படி ஒரு ரெக்கார்டு இல்ல.. 'உச்'சுக் கொட்டும் திரையுலகம்.. போனி கபூரின் பையனுக்கு வந்த நிலமையா இது?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  இந்திய வரலாற்றுலயே இப்படி ஒரு ரெக்கார்டு இல்ல.. 'உச்'சுக் கொட்டும் திரையுலகம்.. போனி கபூரின் பையனுக்கு வந்த நிலமையா இது?

இந்திய வரலாற்றுலயே இப்படி ஒரு ரெக்கார்டு இல்ல.. 'உச்'சுக் கொட்டும் திரையுலகம்.. போனி கபூரின் பையனுக்கு வந்த நிலமையா இது?

Malavica Natarajan HT Tamil
Published Oct 30, 2024 04:38 PM IST

தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் நடித்த தி லேடி கில்லர் திரைப்படம் தான் இதுவரை மோசமான வசூலை சந்தித்த படம் எனப் பெயர் பெற்றுள்ளது.

இந்திய வரலாற்றுலயே இப்படி ஒரு ரெக்கார்டு இல்ல..  'உச்'சுக் கொட்டும் திரையுலகம்.. போனி கபூரின் பையனுக்கு வந்த நிலமையா இது?
இந்திய வரலாற்றுலயே இப்படி ஒரு ரெக்கார்டு இல்ல.. 'உச்'சுக் கொட்டும் திரையுலகம்.. போனி கபூரின் பையனுக்கு வந்த நிலமையா இது?

இந்நிலையில், பாலிவுட் வரலாற்றிலேயே ஒரு படம் மோசமான வசூலைப் பெற்றது என்றால் அது இந்தப் படம் தான் என தகவல்கள் பரவி வருகின்றன. காரணம், 45 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், திரையரங்களில் வெளியாகி வெறும் 60 ஆயிரம் ரூபாயை மட்டுமே வசூலித்துள்ளது என்பது தான்.

யூடியூபில் இலவசமாக வெளியான படம்

அதுமட்டுமல்லாமல், திரையரங்கில் இவ்வளவு குறைவான வசூலை இதுவரை எந்தப் படங்ஸோகளும் பெறாத நிலையில், இந்தப் படத்தை வாங்க ஓடிடி நிறுவனங்களும் மறுத்து விட்டன. இந்தப் படத்தை வெளியிட்டால் தங்களுக்கு எந்த லாபமும் கிடைக்காது எனவும் கூறி வந்துள்ளனர். இதனால், இந்தப் படத்தை டி-சீரிஸ் நிறுவனமே, அதன் யூடியூப் சேனலில் இலவசமாக படத்தைப் பார்க்க வெளியிட்டுள்ளதாம்.

தோல்வியை ஒப்புக் கொண்ட இயக்குநர்

இந்தப் படம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான சமயத்தில் பல எதிர்மறை விமர்சனங்கள் வரத் தொடங்கின. இதையடுத்து, இப்படத்தின் இயக்குநர், படம் வெளியான உடனேயே தனது படம் முழுமையடையவில்லை என்று பேட்டி கொடுத்துள்ளார். 

அந்தப் பேட்டியில் படத்தின் திரைக் கதையை 117 பக்கங்களுக்கு நாங்கள் தயார் செய்தோம். ஆனால், இதில் 30 பக்கங்களை நாங்கள் படமாக்கவே இல்லை. இந்தப் படத்தில், நடிகர் அர்ஜுனுக்கும் நடிகை பூமிக்குமான காதல் காட்சிகளை முழுமையாக படமாக்கவில்லை. 

அத்துடன், அர்ஜுன் மதுவுக்கு அடிமையாவது, விரக்தியில் ஊரை விட்டு வெளியேற நினைப்பது, அர்ஜுனின் உளவியல் நிலைகளை படத்தில் விளக்கத் தவறிவிட்டோம். இதனால் படம் மக்களுக்கு முழமையாக புரியவும், அதை ஏற்றுக் கொள்ளவும் தயக்கம் காட்டி வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், படம் ஒரு காட்சக்கும் மற்றொரு காட்சிக்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பதால், அவற்றை ஒன்றிணைத்து, மக்கள் கதாப்பாத்திரங்களுடன் இணைவது மிகவும் கடினமார இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

படத்தின் பிரச்சனையே வேறு

தி லேடி கில்லர் படம் இவ்வளவு மோசமான வசூலைப் பெற்றது நிச்சயம் ஒரு இயக்குநராக எனக்கு வேதனை அளிக்கிறது. ஆனால் இதற்கு முற்றிலும் நடிகர்கள் காரணம் இல்லை. இந்தப் படத்திற்காக அர்ஜுன் மற்றும் பூமி ஆகியோர் அவர்களின் இதயத்தையும் ஆன்மாவையும் படத்திற்காக கொடுத்தனர். அவர்களுடன் பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தில் பிரச்சனையே வேறு. நாங்கள் சொன்ன பொய்யால் இந்த இடத்தில் நிற்கிறோம். அந்தக் கதையே வேறு எனக் கூறி என்ன நடந்தது என்பதைக் கூற மறுக்கிறார்.

பரிதாபத்தில் அர்ஜுன் கபூர்

ஏற்கனவே தன்னை விட 12 வயது மூத்த நடிகையான மலைக்கா அரோராவுடன் அர்ஜுன் கபூர் உறவில் இருந்து வந்தார். அந்த உறவும் சமீபத்தில் முடிவுக்கு வந்த நிலையில், இது தொடர்பான விமர்சனத்தை அவர் எதிர்கொண்டு வந்த வண்ணம் இருந்தார். இந்த சமயத்தில் தன்னுடைய படம் குறித்த செய்தி அவருக்கு கூடுதல் வேதனையை கொடுக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.