இன்னும் ஆட்டம் முடியல.. மலைப் பாம்பால் டிடிஎஃப் வாசனுக்கு வந்த சிக்கல்.. வனத்துறையினர் அதிரடி சோதனை!
கோவை மாவட்டம் காரமடை அருகே வெள்ளியங்காட்டில் உள்ள டிடிஎஃப். வாசன் வீட்டில் காரமடை வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
பிரபல யூடியூபரான டிடிஎஃப். வாசன் அதிவேகமாக பைக் ஓட்டி சாகசம் செய்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவர், தனது சமூக வலைதள பக்கத்தில் சமீபத்தில் பாம்புடன் வீடியோ பதிவிட்டது சிக்கலை ஏற்படுத்தியது.
இதையடுத்து தனது கையில் பாம்பை சுற்றியபடி வீடியோ வெளியிட்ட பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் பிராணிகள் இருந்த கடையில் இருந்து அரியவகை ஆமை உள்ளிட்ட உயிரினங்களை அவர் கைப்பற்றி கொண்டு சென்றனர். இந்த விவகாரம் குறித்து டிடிஃஎப் வாசன் வீடியோ வெளியிட்டு இருந்தார்.
அவர் வெளியிட்ட அந்த வீடியோவில், 'உங்கள் எல்லோருக்கும் நடப்பது என்னவென்று நன்றாகவே தெரியும். புதிதாக ஒரு வீடியோவை பதிவிட்டால், அது தொடர்பாக தவறான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். அப்படி என்னதான் என்மீது உங்களுக்கு வெறுப்பு என்று எனக்கு தெரியவில்லை. உண்மையில் இது மிக மிக தவறான விஷயம். மொத்தமாக இரண்டு வீடியோக்களை நான் வெளியிட்டு இருக்கிறேன். அந்த வீடியோக்களை பார்த்தாலே உண்மை என்னவென்று உங்கள் எல்லோருக்கும் தெரிந்து விடும். பின்னர் ஏன் இவ்வளவு தவறான செய்திகளை வெளியிட்டு என் மீது வழக்கு பதிவு செய்ய முயற்சி எடுக்க வேண்டும்.
என்னை கெட்டவன் போல காட்டு முயற்சிக்கிறீர்கள்
மக்கள் மத்தியில் ஏன் என்னை கெட்டவன் போல காட்டு முயற்சிக்கிறீர்கள். ஆனால், நீங்கள் நன்றாக இருங்கள். கர்மா என்ற ஒன்று இருக்கிறது. கர்மா இஸ் பூமராங். கர்மா யாரையுமே சும்மா விடாது. மக்கள் மத்தியில் எனக்கு என்று மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது என்று தெரிந்ததோ, அன்றைய தினத்திலிருந்து இப்போது வரை பிரச்சினை எழுந்து கொண்டே இருக்கிறது.
எல்லாவற்றையும் நான் சட்டப்படி செய்திருந்தும் என் மீது வழக்கு பதிவு செய்தால் நான் என்ன செய்வது. அப்படி இருக்கும் பொழுது நான் ஏன் சட்டப்படி எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்ற கேள்வி வருமா வராதா..? ' என்று பேசி இருந்தார்.
டிடிஎஃப். வாசன் வீட்டில் காரமடை வனத்துறையினர் அதிரடி சோதனை
இந்நிலையில், கோவை மாவட்டம் காரமடை அருகே வெள்ளியங்காட்டில் உள்ள டிடிஎஃப். வாசன் வீட்டில் காரமடை வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் வனவிலங்குகள் எதுவும் டிடிஎஃப் வாசனின் வீட்டில் இல்லை என்றும், இதுதொடர்பான விவரங்களை சென்னை வனத்துறைக்கு தெரிவித்துள்ளதாகவும் வனச்சரகர் கூறியுள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்