ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையமாக கொண்டு வெளியாகும் ‘தி ஹண்ட்’ வெப் சீரிஸ்! - எந்த ஓடிடியில் எப்போது வெளியாகிறது?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையமாக கொண்டு வெளியாகும் ‘தி ஹண்ட்’ வெப் சீரிஸ்! - எந்த ஓடிடியில் எப்போது வெளியாகிறது?

ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையமாக கொண்டு வெளியாகும் ‘தி ஹண்ட்’ வெப் சீரிஸ்! - எந்த ஓடிடியில் எப்போது வெளியாகிறது?

HT Tamil HT Tamil Published Jun 19, 2025 01:21 PM IST
HT Tamil HT Tamil
Published Jun 19, 2025 01:21 PM IST

தேசிய விருது வென்ற இயக்குநர் நாகேஷ் குக்கனூர் இயக்கியுள்ள இந்த வெப்சீரிஸ், பத்திரிகையாளர் அனிருத்ய மித்ரா எழுதிய பேஸ்ட் செல்லிங் புத்தகமான ‘Ninety Days’-ஐ அடிப்படையாகக் கொண்டது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையமாக கொண்டு வெளியாகும் ‘தி ஹண்ட்’  வெப் சீரிஸ்! - எந்த ஓடிடியில் எப்போது வெளியாகிறது?
ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையமாக கொண்டு வெளியாகும் ‘தி ஹண்ட்’ வெப் சீரிஸ்! - எந்த ஓடிடியில் எப்போது வெளியாகிறது?

யார் டைரக்டர்?

தேசிய விருது வென்ற இயக்குநர் நாகேஷ் குக்கனூர் இயக்கியுள்ள இந்த வெப்சீரிஸ், பத்திரிகையாளர் அனிருத்ய மித்ரா எழுதிய பேஸ்ட் செல்லிங் புத்தகமான ‘Ninety Days’-ஐ அடிப்படையாகக் கொண்டது.

அவரது நேரடி விசாரணை அனுபவங்களைத் தழுவி உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், உளவுத்துறை தோல்விகள், அரசியலில் இருண்ட பக்கங்கள், தர்மத்தின் பெயரில் பறி போன மனித இழப்புகள் ஆகியவற்றை சுவாரசியமான வகையில் ஆராய்கிறது.

இத்திரைப்படத்தின் திரைக்கதை, ரோஹித் பனாவாலிகர் மற்றும் ஸ்ரீராம் ராஜன் ஆகியோருடன் இணைந்து எழுதப்பட்டுள்ளது.

நடிகர்கள் மற்றும் அவர்களின் பாத்திரங்கள் விபரம்

* அமித் சியால் – டி.ஆர். கார்த்திகேயன் (SIT தலைமை அதிகாரி)

* சாஹில் வைத் – அமித் வர்மா (SP – CBI)

* பகவதி பெருமாள் – ரகோத்தமன் (DSP – CBI)

* டேனிஷ் இக்பால் – அமோத் காந்த் (DIG – CBI)

* கிரிஷ் சர்மா – ராதாவினோத் ராஜு (DIG – CBI)

* வித்யுத் கார்க் – கேப்டன் ரவீந்திரன் (NSG கமாண்டோ)

மேலும், ஷஃபீக் முஸ்தபா, அஞ்சனா பாலாஜி, பி. சாய் தினேஷ், ஷ்ருதி ஜெயன், கவுரி மேனன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இது ஒரு யதார்த்தத்தை அடிப்படையாக கொண்ட, உணர்ச்சியையும் உண்மையையும் ஒருசேரக் கொண்டுவரும் ஆழமான அரசியல் திரில்லர் படம் என்று படக்குழு இந்த வெப் சீரிஸை புரோமோட் செய்து இருக்கிறது.