The Goat Update: தி கோட் படத்தின் அப்டேட் கேட்ட ரசிகர்..இயக்குநர் வெங்கட் பிரபு சொன்ன நச் பதில் என்ன தெரியுமா?
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் அப்டேட் குறித்து வெங்கட் பிரபு வெளியிட்டார்.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’.
இந்தப்படத்தின் போஸ்டர்கள் புத்தாண்டு மற்றும் பொங்கல் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது. அதன் மூலம், நடிகர் விஜய் படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பது உறுதியானது. கிட்டதட்ட 20 வருடங்களுக்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜா விஜயின் இந்தத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். முன்னதாக இருவரும் புதிய கீதை திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினர்.
இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். மேலும் துணை கதாபாத்திரங்களில் நடிகர்கள் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, அஜ்மல் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்தப்படத்திற்கு கேப்டன் மில்லர் படத்தில் பணியாற்றிய கேமராமேன் சித்தார்த் நுனி கேமராமேனாக பணியாற்றுகிறார்.
முன்னதாக, ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடித்து 2019 ஆம் ஆண்டு வெளியான ஜெமினி மேன் என்ற ஹாலிவுட் படத்தின் கதையை அடிப்படையாக வைத்து தளபதி விஜய்யின் தி கிரேடட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
ஜெமினி மேன் படத்தில் வில் ஸ்மித் மூன்று ரோலில் நடித்திருப்பார். அப்படியானால் விஜய்க்கு இந்த படத்தில் மூன்று ரோல் இருக்கலாம் எனவும், மற்றொரு கதாபாத்திரத்தை சஸ்பென்ஸாக வைத்திருப்பார்கள் எனவும் பேச்சு அடிபடுகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 'தி கோப்' படத்தின் டிஜிட்டல் உரிமைகள் ரூ. 125 கோடிக்கு விற்கப்பட்டதாகவும், இந்தி பதிப்பு தனித்தனியாக ரூ.25 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த பிரம்மாண்டமான ரூ.150 கோடி டிஜிட்டல் உரிமை மதிப்பில் புதிய சாதனை படைத்துள்ளது.
நடிகர் விஜய், The Goat படத்தில் நடிப்பதற்காக 200 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குவதாக சொல்லப்படுகிறது. அடுத்து தளபதி 69 ஆவது படம் தன்னுடைய கடைசி படம் என்பதால் அதில் இன்னும் சற்று அதிகமாக சம்பளம் வாங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
"தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற தலைப்பு டிசம்பர் 31 அன்று ம வெளியிடப்பட்டது, இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதைத் தொடர்ந்து, படத்தின் அறிவியல் புனைகதை கருப்பொருளைக் கிண்டல் செய்யும் இரண்டாவது விளம்பரப் போஸ்டர் ஜனவரி 1 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.
ஜனவரி 15 ஆம் தேதி அன்று, பொங்கல் பண்டிகையை ஒட்டி, போர்க்களப் பின்னணியில் பிரபு தேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் அமீர் நடித்த கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி, விஜய் இடம்பெறும் மூன்றாவது விளம்பரப் போஸ்டர் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் ரசிகர்கள் தொடர்ந்து தி கோட் படத்தின் அப்டேட்டை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் கேட்டு கொண்டே இருந்தார்கள்.
அதன் படி, ”சொல்லலாம் னு நெனச்சேன்! இப்போ இதுக்கு மேல எப்படி னு நீங்க சொல்லுங்க “ எனக் குறிப்பிட்டு உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட் டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்