The Goat Trailer : ஆகஸ்ட் 17.. 5 மணிக்கு நடக்கப் போகும் சம்பவம்.. தளபதி ஃபேன்ஸ் தயாரா?
The Goat Trailer : அதிரடியான இந்த அப்டேட், உலகெங்கிலும் உள்ள தளபதி விஜய் ரசிகர்களுக்கு சுதந்திர தின ஸ்பெஷலாக, தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தரப்பட்டுள்ளது. தளபதி விஜய், இயக்குனர் வெங்கட்பிரபு உள்ளிட்ட பலரும், இந்த அறிவிப்பை தங்கள் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
The Goat Trailer : தளபதி விஜய் நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், AGS தயாரிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் the greatest of all time. சுருக்கமாக The Goat என அழைக்கப்படுகிறது. யுவன்சங்கர்ராஜா- வெங்கட்பிரபு கூட்டணியில் ஏற்கனவே பாடல்கள் வெளியாகி, பரபரப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில், படத்தின் ட்ரெய்லர் எப்போது வரும் என்கிற எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்து வருகிறது.
தளபதி ரசிகர்களின் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, இன்று காலையே, இயக்குனர் வெங்கட்பிரபு ஒரு அப்டேட் செய்திருந்தார். அதில், இன்று கட்டாயம் அப்டேட் வரும் என்று கூறியிருந்தார். அவர் ட்விட் வெளியிட்ட நொடியிலிருந்து தளபதி ரசிகர்கள் தரப்பில் பட்டாம்பூச்சி பறக்கத் தொடங்கியது. நினைத்தது போலவே, The Goat படத்தின் ட்ரெய்லர் தொடர்பான அறிவிப்பு வந்துள்ளது. அந்த அறிவிப்பின் படி, ஆகஸ்ட் 17 ம் தேதியான நாளை மறுநாள், தி கோட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் 17 ம் தேதி, மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கும் The Goat திரைப்படத்தின் டரெய்லர் வெளியீட்டு கொண்டாட, இப்போதே தளபதி விஜய் ரசிகர்கள் தயாராகிவிட்டனர். அநேகமாக தியேட்டர் வாசல்கள் அன்றைய தினம், ஆர்ப்பரிக்கப் போகிறது. இரட்டை வேடங்களில் விஜய் நடிப்பதாக கூறப்படும் The Goat திரைப்படத்தின் எதிர்பார்ப்பு, ஏற்கனவே உலகளாவிய அளவில் இருக்கும் நிலையில், அதை மேலும் எகிற வைக்க, இந்த ட்ரெய்லர் வெளியீடு ஒரு காரணமாக இருக்கும்.
அதிரடியான இந்த அப்டேட், உலகெங்கிலும் உள்ள தளபதி விஜய் ரசிகர்களுக்கு சுதந்திர தின ஸ்பெஷலாக, தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தரப்பட்டுள்ளது. தளபதி விஜய், இயக்குனர் வெங்கட்பிரபு உள்ளிட்ட பலரும், இந்த அறிவிப்பை தங்கள் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
சினிமா தொடர்பான அனைத்து அப்டேட் செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு கிடைக்க, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள்.
தொடர்புடையை செய்திகள்