‘திருச்சிற்றம்பலம்’ டைரக்டரின் அடுத்த படைப்பு.. ‘ஹாரி பாட்டர்’ லொகேஷன்! - மாஸ் காட்டும் மாதவன்! - விபரம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘திருச்சிற்றம்பலம்’ டைரக்டரின் அடுத்த படைப்பு.. ‘ஹாரி பாட்டர்’ லொகேஷன்! - மாஸ் காட்டும் மாதவன்! - விபரம்!

‘திருச்சிற்றம்பலம்’ டைரக்டரின் அடுத்த படைப்பு.. ‘ஹாரி பாட்டர்’ லொகேஷன்! - மாஸ் காட்டும் மாதவன்! - விபரம்!

Kalyani Pandiyan S HT Tamil
Nov 03, 2024 09:46 AM IST

‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிக்கிறார். அந்தப்படம் குறித்தான விபரங்களை இங்கே பார்க்கலாம்.

‘திருச்சிற்றம்பலம்’ டைரக்டரின் அடுத்த படைப்பு.. ராதிகாவிற்கு வேற மாறி ரோலாமே..? மாஸ் காட்டும் மாதவன் - விபரம்!
‘திருச்சிற்றம்பலம்’ டைரக்டரின் அடுத்த படைப்பு.. ராதிகாவிற்கு வேற மாறி ரோலாமே..? மாஸ் காட்டும் மாதவன் - விபரம்!

இதற்கிடையே, நடிகர் மாதவன், ‘யாரடி நீ மோகினி’, திருச்சிற்றம்பலம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தப்படத்திற்கு ‘ அதிர்ஷ்டசாலி' என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.

 

ஃபர்ஸ்ட் லுக்
ஃபர்ஸ்ட் லுக்

‘அதிர்ஷ்டசாலி’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்றது. மேலும், இந்தப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் பலருடைய கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

ஃபேண்டசி டிராமா கதையம்சம் கொண்டு உருவாகும் அதிர்ஷ்டசாலி திரைப்படத்தை ஏ.ஏ. மீடியா கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பாக சர்மிளா, ரேகா விக்கி & மனோஜ் முல்கி ஆகியோர் பிரமாண்டமாக தயாரித்துள்ளார்கள். இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தின் புகழ்பெற்ற பகுதிகளில் நடைபெற்றுள்ளது. உலக புகழ்பெற்ற ஹாரி பாட்டர் படங்கள் படமாக்கப்பட்ட லொகேஷன்களான ஃபோர்த் ப்ரிட்ஜ், எடின்பர்க், டீன் வில்லேஜ் மற்றும் விக்டோரியா ஸ்டிரீட் உள்ளிட்ட லொகேசன்களில் அதிர்ஷ்டசாலி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்த படம் முன்னணி நடிகர், நடிகைகளின் அசாத்திய நடிப்பு, சிறப்பான தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பிரமாண்ட காட்சி அமைப்புகளால் ரசிகர்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு தலைசிறந்த அனுபவத்தை கொடுக்கும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மாதவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் மடோனா செபஸ்டியன், ராதிகா சரத்குமார், சாய் தன்ஷிகா, ஜெகன், நிரூப் என்.கே., உபசனா ஆர்.சி, மாத்யூ வர்கீஸ், உதய் மகேஷ், கே.எஸ்.ஜி. வெங்கடேஷ், ரவி பிரகாஷ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் நடித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்ய, எம். தியாகராஜன் படத்தொகுப்பு செய்கிறார். விரைவில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

மித்ரன் முன்னதாக இயக்கி வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்த நடிகை நித்யா மேனனுக்கு தேசிய விருது கிடைத்தது. ஆனால், இந்த தேசிய விருது, கார்கி படத்தில் நடித்த சாய்பல்லவிக்குச் சென்று இருக்க வேண்டும் என்று கமெண்டுகள் எழுந்தன. இந்த நிலையில், இதற்கு நித்யா மேனன் பதிலடி கொடுத்தார்.

அதில் அவர் பேசியதாவது, “ எனக்கு தேசிய விருது கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியில் துள்ளி குதித்தவர்கள். ஆனந்ததில் பேச முடியாமல் திணறியவர்கள், என்னை தொடர்பு கொண்டு வாழ்த்தியவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். இதுவரை நான் சந்திக்காத பலர் என்னை தூரத்தில் இருந்து தங்களுடைய அன்புள்ளம் கொண்ட இதயத்தால் ஆசீர்வதித்தனர்; வாழ்த்தினர். அவர்கள் அனைவரும், தாங்கள் தேசிய விருது பெற்றது போல என்னை உணரவைத்தனர். என்னை தனிப்பட்ட முறையில் அழைத்து கொடுத்த உங்களது ஆசீர்வாதம் எப்படியானது தெரியுமா?

ஒரு சிறந்த நடிப்பு என்பது எடை இழப்பு, எடை அதிகரிப்பு, பிராஸ்தடிக் மேக்கப் அல்லது பெரிய உடல் ரீதியான மாற்றங்களோடு தொடர்புடையது கிடையாது. ஒரு சிறந்த நடிப்பின் ஒரு பகுதிதான். ஆனால் அதுவே முழு நடிப்பு அல்ல. அதை நான் எப்போதுமே செய்ய முயற்சித்து இருக்கிறேன். அது எனக்கு பெரிதளவு உதவியும் இருக்கிறது. திருச்சிற்றம்பலம் படத்தை பொருத்தவரை யாருக்கு விருது கிடைத்திருந்தாலும் அது நம் நால்வரும் பகிர்ந்து கொள்வதே சரியாக இருக்கும்.

காரணம், நான் நடிப்பில் முன்னணி நடிகர்கள் இவ்வளவு சமமாக பங்களித்த ஒரு படத்தில் நான் இதுவரை நடித்ததில்லை. ஆகையால் நாம் நால்வரும் இதனை பகிர்ந்து கொள்ளலாம். உங்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது பலம் பற்றி வலிமையாக குரல் கொடுத்ததற்கு நன்றி. உண்மையை விட வதந்திகள் அதிகம் பேசப்படும் இடத்தில் மேலே வருவது கடினம். நாங்கள் இன்னும் பல படங்களில் இணைந்து நடிக்க வேண்டியது இருக்கிறது.” என்று குறிப்பிட்டு இருந்தார்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.