HT OTT SPL: ‘மூச்சு விட்டா அவ்வளவுதான்..’-கதிகலங்க வைக்கும் படம்!
இந்தப் படத்தை இயக்கியவர் Fede Álvarez. இப்படி சொன்னா உங்களுக்கு இவரை யாருன்னு தெரியாது. Evil Dead னு ஒரு படம் வந்ததே ஞாபகம் இருக்கா? ஆங்.. அந்தப் படத்தோட இயக்குநர் தான் இவரு.
கண்பார்வை அற்ற ஒருவரின் வீட்டில் திருட முயற்சிக்கும் மூன்று இளசுகள். அதில் ஒருவர் இளம் பெண். இவர்கள் அந்த வீட்டில் நுழைந்ததை எப்படியோ மோப்பம் புடித்துவிடும் அந்த வீட்டு உரிமையாளர், அவர்களில் ஒருவரை தீர்த்துக் கட்டி விடுகிறார். எஞ்சியிருக்கும் இருவர் தப்பித்தார்களா, உரிமையாளர் என்ன ஆனார் என்பது பரபர திரைக்கதை.
இந்தப் படத்தின் பெயர் Don't Breathe. பலரும் அறிந்திருக்க வாய்ப்புள்ளது. தெரியாதவர்கள் தொடர்ந்து படிக்கலாம்.
டோன்ட் ப்ரீத் என்பது 2016 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க ஹாரர்-த்ரில்லர் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஜேன் லெவி, டிலான் மின்னெட், டேனியல் சோவாட்டோ மற்றும் ஸ்டீபன் லாங் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தை கோஸ்ட் ஹவுஸ் பிக்சர்ஸ் மற்றும் குட் யுனிவர்ஸ் தயாரித்து சோனி பிக்சர்ஸ் விநியோகம் செய்தது.
இந்தப் படத்தை இயக்கியவர் Fede Álvarez. இப்படி சொன்னா உங்களுக்கு இவரை யாருன்னு தெரியாது. Evil Dead னு ஒரு படம் வந்ததே ஞாபகம் இருக்கா? ஆங்.. அந்தப் படத்தோட இயக்குநர் தான் இவரு.
அதுல ரொம்ப ரத்தம் தெறிக்க விட்டாச்சுன்னு இந்தப் படத்துல கொஞ்சம் கம்மி பண்ணி எடுத்துருக்காரு மனுஷன்.
படத்தோட ஓபனிங் காட்சி தான் க்ளைமேக்ஸ். இது உங்களுக்கு படத்தை முழுசா பாத்து முடிக்கும்போதுதான் தெரியும்.
Stephen Lang தான் கண்பார்வை தெரியாதவரா நடிச்சுருக்காரு. பொதுவா படத்துல வில்லனோட நடிப்ப பாராட்டும்போது அப்பப்பா மனுஷன் கண்ணுலேயே மிரட்டியிருக்கான்டான்னு சொல்லுவோம்.
ஆனால், இவர் கண் தெரியாதவரா நடிச்சும் மிரட்டலாம்னு சொல்லியிருக்காரு.
இவரு மட்டுமல்லை. திருடப்போற மூணு பேர்ல ரெண்டு பேருக்கு நடிப்புல ஸ்கோர் பண்ண நிறைய வாய்ப்பு. அதை கச்சிதமா பண்ணி முடிச்சுருக்காங்க.
மியூசிக் போட்து Roque Baños. கேமரா ஹேண்டில் பண்ணது Pedro Luque. எடிட்டிங் மொத்தம் மூணு பேரு பண்ணிருக்காங்க. Eric L. Beason, Louise Ford, Gardner Gould இவங்கதான் எடிட்டர்ஸ். இவங்க மூணு பேரும் படத்துக்கு தூண்னு சொல்லலாம். அவ்ளோ சிறப்பா படத்தை தொகுத்து தந்திருக்காங்க.
88 நிமிடம் தான் படம். ஆனா, சீட்டு நுணில உட்காந்து பார்க்க வைக்கும் படம்ங்க. நெட்பிளிக்ஸ்ல இருக்கு. இதோ பார்ட் 2-ம் நெட்பிளிக்ஸ் கிடைக்குது. மூச்சு விடாம கம்முனு பாருங்க!
டாபிக்ஸ்