ஒரு வழியாக முடிந்தது பஞ்சாயத்து.. ஒரு வருஷத்திற்கு பின் ஓடிடி பக்கம் திரும்பிய லால் சலாம்..
ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்த 'லால் சலாம்' திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஓராண்டிற்கு பின் வெளியாகியுள்ளது.

ஒரு வழியாக முடிந்தது பஞ்சாயத்து.. ஒரு வருஷத்திற்கு பின் ஓடிடி பக்கம் திரும்பிய லால் சலாம்..
கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த படம் 'லால் சலாம்'. முதலில் இந்தப் படத்தில் ரஜினி கேமியோ ரோலில் தான் வருவார் எனக் கூறப்பட்ட நிலையில், பின் சுமார் அரை மணி நேரத்திற்கு இவரது காட்சிகள் இடம் பெற்றது. இருப்பினும் இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல் திரையரங்கில் வெளியாகி பெரும் வசூல் தோல்வியை சந்தித்தது.
லால் சலாம்
தமிழ் இளம் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இந்த விளையாட்டு சார்ந்த நாடகத் திரைப்படத்தில் முன்னணி வேடங்களில் நடித்தனர். ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கிய இந்தப் படம் கடந்த 2024 பிப்ரவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது.