ஓடிடி பக்கம் வந்த காதல் புரட்சிப் படம்.. காதல் என்பது பொது உடைமை படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஓடிடி பக்கம் வந்த காதல் புரட்சிப் படம்.. காதல் என்பது பொது உடைமை படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

ஓடிடி பக்கம் வந்த காதல் புரட்சிப் படம்.. காதல் என்பது பொது உடைமை படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

Malavica Natarajan HT Tamil
Published Apr 15, 2025 06:39 AM IST

காதல், பாலினம், கல்யாணம் என முக்கிய பிரச்சனைகள் பற்றி பேசிய காதல் என்பது பொது உசைமை படம் தற்போது சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வளியாகி உள்ளது.

ஓடிடி பக்கம் வந்த காதல் புரட்சிப் படம்.. காதல் என்பது பொது உடைமை படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
ஓடிடி பக்கம் வந்த காதல் புரட்சிப் படம்.. காதல் என்பது பொது உடைமை படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகும், தன் பாலின காதலர்களை ஏற்றுக்கொள்ளும் மக்கள் குறைவு. இதுபோன்ற தைரியமான கருப்பொருள்களை மையமாகக் கொண்ட திரைப்படங்கள், வலைத்தொடர்கள் அண்மையில் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், இப்போது ஒரு தமிழ் திரைப்படம் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கியுள்ளது.

காதல் என்பது பொது உடைமை ஓடிடி ரிலீஸ்

கடந்த காதலர் தினம் அன்று, பிப்ரவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் காதல் என்பது பொது உடைமை. அதாவது, காதல் என்பது பொதுச் சொத்து என்று பொருள். இந்த திரைப்படம் இப்போது சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. ஏப்ரல் 14 ஆம் தேதி (திங்கள் கிழமை) முதல் இந்த திரைப்படம் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. திரையரங்குகளில் வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் இடம் பிடித்துள்ளது.

ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு

சன் நெக்ஸ்ட் ஓடிடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இப்படம் குறித்த ரிலீஸ் தகவலை வெளியிட்டுள்ளது. “தடைகளைத் தாண்டி, காதலை உணருங்கள். இப்போதே பாருங்கள். காதல் என்பது பொது உடைமை படத்தை சன் நெக்ஸ்டில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது” என்று குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளது. இந்தப் படத்தில் வினீத், ரோஹினி, லிஜோமோல் ஜோஸ், அனுஷா பிரபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

காதல் என்பது பொது உடைமை திரைப்படத்தின் கதை என்ன?

ஒரே பாலினக் காதல், திருமணம் என்பது இன்னும் நம் சமூகத்தில் வித்தியாசமாகப் பார்க்கப்படுகிறது. இதுபோன்ற காதல், திருமணத்தை ஏற்றுக்கொள்ளும் நிலையில் பெரும்பாலான மக்கள் இன்னும் இல்லை. இந்தப் பின்னணியில், இரண்டு லெஸ்பியன்களின் காதல், திருமணம் என்ற கருப்பொருளுடன் உருவாகியுள்ள திரைப்படம் தான் காதல் என்பது பொது உடைமை. இந்த திரைப்படம் பிப்ரவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அபிநவ் சுப்ரமணியன் கதை அமைத்த இந்த திரைப்படத்தை ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். வினீத், ரோஹினி போன்ற மூத்த நடிகர்களுடன் லிஜோமோல் ஜோஸ், அனுஷா பிரபு போன்றவர்களும் நடித்துள்ளனர்.

ஏற்றுக் கொள்ளாத சமூகம்

ஒரு பெண் மற்றொரு பெண்ணை காதலிக்கிறாள். இந்த விஷயம் அந்தப் பெண்ணின் வீட்டாருக்குத் தெரிய வருகிறது. இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைகிறார்கள். இதை அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது எப்படி சாத்தியம் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

வரவேற்கத்தக்க படம்

இந்த நிகழ்வுகளின் போது, அந்த இளம் காதல் ஜோடி அவர்களை சமாதானப்படுத்த என்ன முயற்சிகள் செய்கிறார்கள்? இந்தக் கட்டத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? இறுதியில் அந்த பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை. நம் சமூகத்தில் எல்ஜிபிடிக்யூ சமூகம் (LGBTQ) எதிர்கொள்ளும் பிரச்சனைகள், சவால்களை இந்த திரைப்படம் மிகவும் யதார்த்தமாகக் காட்ட முயற்சித்துள்ளது. இது வரேவற்கத்தக்க படங்களில் ஒன்று.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு பிரிவில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். பெரியார் பல்கலைகழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற இவர், விடியல் தொலைக்காட்சி, ஈ டிவி பாரத், வே 2 நியூஸ், ஆதன் தமிழ் மீடியா ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.