Varalaxmi Sarathkumar: 'வரு வந்தாலே எனர்ஜி வரும்.. அவளால எனக்கு மகன் கிடைச்சிருக்காரு'- சந்தோஷமாக பேசிய நடிகை சாயா
Varalaxmi Sarathkumar: "நான் வருவோட கணவர மருமகன்னு சொல்லக்கூடாது. எனக்கு ஒரு மகன் கிடைச்சுருக்கான்னு தான் சொல்லனும். ரொம்ப அதிக பாசம், ரொம்ப அதிக அக்கறை, இந்த காலத்துல எல்லாம் இந்த மாதிரி பாக்குறது கஷ்டம்." என்கிறார் நடிகை வரலட்சுமியின் அம்மா சாயா.

Varalaxmi Sarathkumar: நடிகை வரலட்சுமி சினிமாவிலும், திருமண வாழ்க்கையிலும் தன்னை சிறப்பானவளாக நிரூபித்து வரும் சமயத்தில், வரலட்சுமியின் அம்மாவான சாயா தற்போது பாலாவின் வணங்கான் படத்தில் நடித்து, சினிமாவிற்குள்ளும் காலடி வைத்துள்ளார்.
படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியான தருணத்தில் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனல், வரலட்சுமியின் அம்மா சாயாவிடம் பேட்டி எடுத்தது. அந்தப் பேட்டியில், சாயா, தன் குடும்பம் குறித்து பேசியுள்ளார்.
வரு சந்தோஷத்துக்காக தான் எல்லாம்..
அந்தப் பேட்டியில், " வரலட்சுமியோட கல்யாண போட்டோ பாக்கும் போது நாங்க அத்தனை பேரும் வருவோட சந்தோஷத்துக்காக ஒன்னா நின்னோம் அது என் நியாபகத்துக்கு வருது. அவளுக்காக நாங்க எங்ககிட்ட இருந்த எல்லா வேறுபாடு, குறைகளை எல்லாம் ஒதுக்கி வச்சு ஒன்னா வந்து நின்னோம். அதுக்கு ஒரே ஒரு காரணம் வருவோட சந்தோஷம் மட்டும் தான். வருவோட கல்யாணம் அவ்ளோ சந்தோஷமா நடந்தது. இது ரொம்பவே அருமையான அனுபவமா எல்லோருக்கும் இருந்தது.
என் வாழ்க்கையின் அதிர்ஷ்டம்
நாங்க எல்லாம் தீபாவளி மாதிரி எதாவது பண்டிகை, விஷேசம் வந்தா ஒரே மாதிரி கலர் இல்லைன்னா ஒரே டிசைன்ல ட்ரெஸ் போடுவோம். எங்களோட வாழ்க்கை எல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்கும். நாங்க குடும்பமா சேர்ந்து ஒன்னா வளர்ந்தோம். முன்னேறினோம்.
என்னோட வாழ்க்கை என் ரெண்டு பொன்னுங்களுக்காக தான் இருக்கு. அவங்க ரெண்டு பேரும் ரொம்ப அன்பானவங்க. அவங்க என் வாழ்க்கையில கிடைச்சது என்னுடைய அதிர்ஷ்டம்.
எனக்கு மகன் கிடைச்சிருக்கான்
நான் வருவோட கணவர மருமகன்னு சொல்லக்கூடாது. எனக்கு ஒரு மகன் கிடைச்சுருக்கான்னு தான் சொல்லனும். ரொம்ப அதிக பாசம், ரொம்ப அதிக அக்கறை, இந்த காலத்துல எல்லாம் இந்த மாதிரி பாக்குறது கஷ்டம். ஒரு அம்மா எப்படி அவரு பாத்துப்பாரோ அந்த மாதிரி என்னை பாத்துக்குறாரு. எந்த குறையும் இல்ல. அவரு எனக்கு மட்டும் இல்ல மொத்த குடும்பத்துக்கே அதே அளவு அன்ப தர்றாரு.
இப்படி தான் வரு கல்யாணம் ஆச்சு
வரு ஏதைவது ரொம்ப முக்கியமான விஷயம்ன்னா என்கிட்ட வந்து பேசுவா. அந்த மாதிரி ஒருநாள் வந்து, அம்மா நான் எனக்கான ஒரு ஆண் துணைய கண்டுபிடிச்சிட்டேன்னு சொன்னா. எனக்கு அப்படியே ஷாக் ஆச்சு. ஒரு மாதிரி பதட்டமாவும் இருந்தது. அதுக்கு அப்புறம் என்கிட்ட அவர பத்தி சொல்லிட்டு உடனே வீடியோ கால் பண்ணா. அவர இதுக்கு முன்னாடியே எனக்கு தெரியும். அப்புறம் எல்லாரும் பேசினோம். அப்புறம் வீட்டுக்கு வந்து பேசி கல்யாணத்த முடிவு
வரு வந்தா எனர்ஜி வரும்
வரு சின்ன வயசுல எல்லாம் நிறைய சண்டை போடுவா. ஆனா அவ நாம சொல்றது எல்லாத்தையும் கேப்பா. ஆரம்பத்துல பிடிவாதம் பிடிச்சா கூட அப்புறம் அவ நமக்காக எல்லாத்தையும் பண்ணுவா. வரு ரொம்ப கேரிங்கான ஆளு. அவ சென்சிடிவ்வும் கூட. வரு வந்தாலே வீடு மொத்தமும் ஒரு எனர்ஜி வந்திடும்.
சினிமா அவளுக்கு தெய்வம்
சினிமாவ பொருத்தவரைக்கும் வரு தன்னைத் தானே முன்னேற்றி கொண்டு பேன ஒரு ஆளு. அவ வேலையில ரொம்ப கரெக்ட்டா இருப்பா. மேக்கப் போட்டுட்டு 9 மணிக்கு செட்டுக்கு வரணும்ன்னு சொன்னா 8.30க்கு எல்லாம் கிளம்பிடுவா. தொழில தெய்வம் மாதிரி பாக்குறா.
எல்லாம் காரணத்துக்காக தான்..
வருவ ஆரம்பத்துல வந்த படங்கள்ல நடிக்க விடலன்னா அதுக்கு காரணம் அந்த நேரம் அவளோட கெரியருக்கு நல்லது இல்ளனஅனு தோனுச்சு. அதுவும் இல்லாம எது நடந்தாலும் அது நன்மைக்கேன்னு எடுத்துக்கணும். போடோ போடி படம் எல்லாம் ரொம்ப பேசப்பட்ட படம். படம் ரிலீஸ் ஆனது வேணும்ன்னா லேட் ஆகிருக்கலாம். ஆனா, அது ரொம்ப ரொம்ப நல்ல படம்.
அவ இப்போ தெலுங்குல நல்ல படம் பண்றா. தமிழ்லயும் கதை கேட்டுட்டு இருக்கா. கதை கிடைசசதுன்னா இங்கயும் படம் பண்ணுவாங்க." எனக் கூறியிருக்கிறார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்