தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sherina: வெளியே சொல்ல கூடாது.. பிக் பாஸ் போட்டியாளரிடம் அத்துமீறி நடந்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்த ட்ரைவர்

Sherina: வெளியே சொல்ல கூடாது.. பிக் பாஸ் போட்டியாளரிடம் அத்துமீறி நடந்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்த ட்ரைவர்

Aarthi Balaji HT Tamil
Feb 08, 2024 11:30 AM IST

நடிகை ஷெரினாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த ட்ரைவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஷெரினா
ஷெரினா

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் மாடலாக இருந்து தமிழ் சினிமாவில் நுழைந்தவர் தான் கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த, ஷெரினா சாம். இவர் 2021 ஆம் ஆண்டு சமுத்திரகனி இயக்கத்தில் வெளியான வினோதய சித்தம் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இப்படத்தின் இவரின் பாத்திரம் அந்த அளவிற்கு மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. 

 இதனையடுத்து வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால், பிக் பாஸ் 6 ஆவது சீசனில் பங்கேற்றார். அதன் மூலம் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உருவானது. ஆனால் எதிர்பார்த்த அளவு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நடிகை ஷெரினாவிடம் மயிலாடுதுறையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்து இருக்கிறார். ஆரம்பத்தில் நன்றாக இருந்த அவர் பின்னர் நடவடிக்கை சரி இல்லாமல் இருந்து உள்ளது. மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு தான் கார்த்திக், ரவுடி ஒருவரின் தம்பி என்பது ஷெரினாவிற்கு தெரிய வந்தது உள்ளது. இதனால் உடனே அவரை ஓட்டுநர் பணியில் இருந்தே ஷெரின் நீக்கி உள்ளார்.

இதனால் கார்த்திக்கிகு ஆத்திரம் வந்து உள்ளது. தனது நண்பர் இளையராஜாவுடன் சேர்ந்து ஷெரினா வீட்டிற்கு மது போதையில் சென்று உள்ளனர். வீட்டிற்குள் நுழைந்து அத்துமீறி  ஷெரினாவிடம் நடந்து கொள்ள முயன்று உள்ளனர்.

மேலும் நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால், உன்னையும் உன் அண்ணனையும் கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவேன் என வாட்ஸ் அப் எண்ணிற்கு, கார்த்திக் ஆடியோ அனுப்பி கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இது தொடர்பாக நடிகை ஷெரினாவின் சகோதரர் கெளரி ஜனார்த்தன், அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் கார்த்திக் மற்றும் அவரின் நண்பர் இளையராஜா மீது காவல் துறையினர்  நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த இருவரையும் தேடி வந்தனர். இந்த விஷயம் தெரிய வந்து கார்த்திக் மற்றும் அவரின் நண்பர் இளையராஜா தலைமறைவாக இருந்தனர்.

இறுதியாக கடந்த மாதம் 25 ஆம் தேதி  இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ஓட்டுநர் கார்த்திக், மயிலாடுதுறை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். நீதிமன்ற உத்தரவின் படி, சென்னை அண்ணாசாலை காவல் நிலைய காவல் துறையினர் கார்த்திக்கை மயிலாடுதுறையில் இருந்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 

இதனை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்