‘2 ம் வகுப்பில் பீடி.. 10 -ம் வகுப்பில் சிகரெட்.. பத்த வைக்கத் தெரியாம… பருத்திக்காடே பத்தி எரிஞ்சு’ - பாலா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘2 ம் வகுப்பில் பீடி.. 10 -ம் வகுப்பில் சிகரெட்.. பத்த வைக்கத் தெரியாம… பருத்திக்காடே பத்தி எரிஞ்சு’ - பாலா!

‘2 ம் வகுப்பில் பீடி.. 10 -ம் வகுப்பில் சிகரெட்.. பத்த வைக்கத் தெரியாம… பருத்திக்காடே பத்தி எரிஞ்சு’ - பாலா!

Kalyani Pandiyan S HT Tamil
Dec 30, 2024 06:47 AM IST

நான் என்னுடைய இரண்டாவது வகுப்பில் பீடி குடித்தேன்; பருத்திக்காட்டில் வைத்து பீடி குடித்துக்கொண்டிருந்த பொழுது, நெருப்பை பற்ற வைக்கத்தெரியாமல் பற்றவைத்து, அதிலிருந்து வந்த நெருப்பு பருத்திக்காட்டின் மீது விழுந்து, சிறிது காடு எரிந்து விட்டது. அதற்கு வீட்டில் பயங்கரமாக அடி விழுந்தது. - பாலா!

 ‘2 ம் வகுப்பில் பீடி.. 10 -ம் வகுப்பில் சிகரெட்.. பத்த வைக்கத் தெரியாம… பருத்திக்காடே பத்தி எரிஞ்சு’ - பாலா!
‘2 ம் வகுப்பில் பீடி.. 10 -ம் வகுப்பில் சிகரெட்.. பத்த வைக்கத் தெரியாம… பருத்திக்காடே பத்தி எரிஞ்சு’ - பாலா!

இந்தத்திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வருகிறது. இந்த நிலையில், அந்த படம் தொடர்பாக பாலா கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார். அந்த பேட்டியில் பாலா அவரது சிகரெட் பிடிக்கும் பழக்கம் குறித்து பேசி இருக்கிறார்.

முயன்றும் என்னால் முடியவில்லை

இது குறித்து அவர் பேசும் போது, ‘நான் சிகரெட் பிடிப்பதை குறைக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். குறைக்க முயற்சி செய்து, குறைத்தும் இருக்கிறேன். ஆனால் அதை முழுமையாக விட்டு விட வேண்டும் என்று நினைக்கவில்லை. காரணம் நான் அதனை முயன்றும் என்னால் அதை செய்ய முடியவில்லை.

எல்லாவற்றிற்கும் ஒரு காலம் வரும் அல்லவா?; அந்த காலம் வரும் பொழுது நானே அதனை விட்டு விடுவேன். சிகரெட் அது ஒரு வகையான பாதுகாப்பற்ற உணர்வு;சிறு வயது பிள்ளைகள் எல்லாம் சிகரெட் பிடிப்பதற்கான காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்; அவர்கள் நான் பெரிய ஆள் என்பதை காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

 

நான் என்னுடைய இரண்டாவது வகுப்பில் பீடி குடித்தேன்; பருத்திக்காட்டில் வைத்து பீடி குடித்துக்கொண்டிருந்த பொழுது, நெருப்பை பற்ற வைக்கத்தெரியாமல் பற்றவைத்து, அதிலிருந்து வந்த நெருப்பு பருத்திக்காட்டின் மீது விழுந்து, சிறிது காடு எரிந்து விட்டது. அதற்கு வீட்டில் பயங்கரமாக அடி விழுந்தது. பத்தாம் வகுப்பில் இருந்து சிகரெட் பிடிக்க ஆரம்பித்தேன்; இப்போது வரை நான் சிகரெட் பிடித்துக்கொண்டிருக்கிறேன்.’ என்று பேசினார்.

வணங்கான் படப்பிரச்சினை குறித்து இயக்குநர் பாலா பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேசும் போது, ‘சினிமா துறையில் எனக்கு பிடித்த நபர்களில் முதலிடத்தில் இருப்பது சூர்யாதான். 

வணங்கான் திரைப்படத்தில் எனக்கும், சூர்யாவுக்கும் பிரச்சினை என்று எழுதிய போது, நானும் அவனும் இது குறித்து நாம் எந்த விளக்கமும் கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்தோம். மேலும் யார் வேண்டுமென்றாலும், என்ன வேண்டுமென்றாலும் எழுதிக்கொள்ளட்டும், பேசிக்கொள்ளட்டும்; நாம் எதுவும் சொல்ல வேண்டாம் என்றுதான் நாங்கள் இருந்தோம்.

நாங்கள் வழக்கமான தொடர்பில்தான் இருந்தோம். உண்மையில் வணங்கான் படத்தில் சூர்யா நடிக்காமல் போனதிற்கு காரணம். சூர்யாவை கன்னியாக்குமரி போன்ற சுற்றுலா தளத்தில் வைத்து எங்களால் ஷூட் செய்ய முடியவில்லை. அவரைப்பார்க்க கூட்டம் கூடி விடுகிறது. எங்களுக்கு மிக மிக சிரமமாக இருந்தது. அதுதான் இணைந்து பணியாற்ற முடியாததிற்கு முதல் காரணம். மற்றப்படி எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட மனத்தாங்கலெல்லாம் கிடையாது.’ என்று பேசினார்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.