Vidaamuyarchi Box Office: இறங்கி ஏறிய விடாமுயற்சி.. 9ம் நாளில் கொஞ்சம் உயிர் பெற்ற வசூல்..
Vidaamuyarchi Box Office: அஜித்- த்ரிஷா கூட்டணியில் வெளியான விடாமுயற்சி படத்தின் 9ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சற்று ஏற்றம் கண்டுள்ளது.

Vidaamuyarchi Box Office: மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித்- த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா , ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த விடாமுயற்சி திரைப்படம் கடந்த 6ம் தேதி வெளியானது. பிரபல அமெரிக்க திரைப்படமான ரிரேக் டவுன் படத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களின் மனதை கவர்ந்து பாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்றதா இல்லையா என்பது குறித்து பார்ப்போம்.
விடாமுயற்சி பாக்ஸ் ஆபிஸ்
விடாமுயற்சி படம் வெளியாகி 9 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், 9ம் நாள் வசூல் நிலவரங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம். இது குறித்து பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களை வெளியிடும் இணையதளமான Sacnilk தளம் வெளியிட்ட தகவல்களின் படி பார்க்கும் போது, விடாமுயற்சி திரைப்படம் வெளியான 9 நாளில், தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 2.01 கோடி வசூலித்துள்ளது.
இந்திய அளவில் படம் வெளியான 9 நாட்களின் கூட்டாக ரூ.86.65 கோடி வசூலித்திருப்பதும், உலகம் முழுவதும் ரூ. 125 கோடி வசூலித்திகுப்பதும் தெரிய வருகிறது. தமிழ்நாட்டில் அஜித், விஜய் போன்ற மாஸ் ஹீரோக்களுக்கு பெரிய அளவில் ஓபனிங் இருந்து வரும் சூழலில், விடாமுயற்சி படம் முதல் நாளைத் தவிர அடுத்தடுத்த நாட்களில் வசூல் குறைந்து கொண்டே செல்கிறது. சனி, ஞாயிறு விடுமுறை தினத்திலும் படம் பார்க்க வருவோரின் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது.
முதல் நாள் வசூல் எவ்வளவு?
விடாமுயற்சி திரைப்படம், வெளியான முதல் நாளில் 26 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக குறிப்பிட்ட அந்த தளம், அடுத்த நாளான வெள்ளிக்கிழமை அதன் வசூலில் 60.58 சதவீதம் குறைந்து, 10. 25 கோடி ரூபாய் வசூல் மட்டுமே செய்திருந்ததாக குறிப்பிட்டு இருந்தது.
விடாமுயற்சி எப்படி இருக்கு?
துணிவு திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் அஜித் நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியிருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்தத் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்.
மனைவியும் மனக்கசப்பும்
அர்ஜுன் ( அஜித்) பிரபல நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கும் கயலுக்கும் ( த்ரிஷா) இடையே நடந்த சந்திப்பு இருவரையும் காதல் கொள்ள வைக்க, ஒரு கட்டத்தில் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். நன்றாக சென்று கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் கயலுக்கு இன்னொருவர் மீது ஈர்ப்பு ஏற்பட, அவள் விவாகரத்து முடிவை எடுக்கிறாள்.
அர்ஜுன் எவ்வளவோ முயற்சித்தும், தன்னுடைய முடிவில் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார் கயல். இந்த நிலையில் இருவரும் கடைசியாக ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள். அந்த பயணத்தில் திரிஷா மிஸ் ஆகிறார். மிஸ் ஆன த்ரிஷாவை அஜித் எப்படி கண்டு பிடித்தார்? அதன் பின்னணியில் நடப்பது என்ன என்பதுதான் படத்தின் கதை.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்