தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Thank You For All The Prayers And Wishes For My Recovery Says Amitabh Bachchan

Amitabh Bachchan : விபத்தில் சிக்கிய அமிதாப் பச்சன் உருக்கம்!

Divya Sekar HT Tamil
Mar 21, 2023 07:39 AM IST

நான் உடல்நலம்பெற வேண்டும் என பிரார்த்தனை செய்த, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்

ட்ரெண்டிங் செய்திகள்

இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.அஸ்வின் தத் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படம் அடுத்த ஆண்டு (2024) பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12-ந்தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ஆக்ஷன் காட்சியின் போது எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த விபத்தில் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டது. இதில் அவரின் விலா எலும்பு பகுதி உடைந்தது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்தில் அவருக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, புரொஜெக்ட் கே படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் மும்பையில் ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்தநிலையில் அமிதாப் பச்சன் படப்பிடிப்பில் ஏற்பட்ட காயம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர், "நான் உடல்நலம்பெற வேண்டும் என பிரார்த்தனை செய்த, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. நான் நன்றாக இருக்கிறேன். விரைவில் பூரண குணமடைவேன் என நம்புகிறேன்" என்றார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்