ஒரு வழியா ஓடிடியில் வந்த தங்கலான்! தடைகளை தகர்த்தெறிந்து வெளியானது! ரசிகர்கள் மகிழ்ச்சி!
பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து கடந்த ஆகஸ்டில் வெளிவந்த தங்கலான் திரைப்படம் ஓடிடியில் வெளியாக பல தடைகள் விதிக்கப்பட்டன. தற்போது இந்த தடைகள் அனைத்தும் விலகி இன்று தங்கலான் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து கடந்த ஆகஸ்டில் வெளிவந்த தங்கலான் திரைப்படம் ஓடிடியில் வெளியாக பல தடைகள் விதிக்கப்பட்டன. தற்போது இந்த தடைகள் அனைத்தும் விலகி இன்று தங்கலான் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. முன்னதாக தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க கோரிய ஒரு மனுவில் படத்தை ஓடிடியில் வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. மேலும் இது குறித்து தணிக்கை சான்று அளிக்கப்பட்டு தங்கலான் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி விட்டபின் ஓடிடியில் வெளியிட தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வைணவர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதால் ஓடிடி தளத்தில் தங்கலான் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி பொற்கொடி என்பவர் வழக்கைத் தொடர்ந்திருந்தார்.
இயக்குநர் பா. ரஞ்சித்
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவில் பல வலிமை மிக்க கதைகள் கொண்ட திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறான படங்கள் பேசும் கருத்தும் சமூகத்திற்கு தேவைப்படுகின்றன. அந்த வரிசையில் சமூகநீதி கருத்துக்களை ஆழமாக படத்தின் வாயிலாக கொண்டு வருபவர் தான் இயக்குநர் பா. ரஞ்சித். இவரது படங்கள் அனைத்தும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை பேசும் படமாக வரும். மேலும் மெட்ராஸ், காலா, கபாலி என பல ஆக்சன் ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார். இவர் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து ஆகஸ்டில் வெளிவந்த தங்கலான் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.
வரலாற்று நிகழ்வு படமாக உருவான தங்கலான் கடந்த ஆகஸ்ட் 15 அன்று வெளியாகியது. இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. மேலும் 100 கோடிக்கும் மேல் வசூல் அள்ளியது. இப்படத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் பண்ணையாரால் நிலத்தை பறிகொடுத்து, கோலார் தங்க சுரங்ககதிற்கு வேலைக்கு செல்கின்றனர். அங்கு பொறுப்பாக உள்ள பிரிட்டிஷ் காரர் அவர்களை அடிமையாக்கி வேலை வாங்குகிறான். இதற்கிடையில் அடிமைப்பட்ட மக்களை விடுவிக்க போராடும் தங்கலானின் துணிச்சல் மிகு கதையே இப்படத்தின் கதையாகும்.
எதிர்பார்க்கப்பட்ட ஓடிடி ரிலீஸ்
ஆகஸ்ட் மாதம் வெளியாகிய தங்கலான் அதிக மாதங்கள் திரையரங்குகளில் ஓடியது. இதனை அடுத்து நவம்பர் மாதம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இருப்பினும் தயாரிப்பு நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டு, வழக்கு எனப் பலத்தடைகளால் படத்தின் ஓடிடி ரீலிஸ் தடைப்பட்டது. இப்படத்தில் நடிகர் சீயான் விக்ரம், பார்வதி திருவோத்து, முத்துக்குமார் உட்பட பலர் நடித்து இருந்தனர். ஒவ்வொருவரும் அவர்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். அனைத்து தரப்பினராலும் படம் பாராட்டப்பெற்றது.
தங்கலான் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படம் வெளியானதை தொடர்ந்து தங்கலான் படத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. மேலும் ஓடிடியில் தங்கலான் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகியுள்ளது. வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் காட்சிகளும், நடிகர்களின் அபார நடிப்பும் தங்கலானிற்கு அதிக பலம் அளித்து இருந்தது. மேலும் பா.ரஞ்சித்தின் நேர்த்தியான இயக்கமும் சிறப்பாக இருந்தது.
டாபிக்ஸ்