Director Pa. Ranjith: தங்கலான் ரிலீஸ் அப்டேட்! அரசியல் கதையை பிரமாண்டமாக இயக்க இருக்கும் பா. ரஞ்சித்
ஜனவரி 26ஆம் தேதி வெளியாவதாக இருந்த தங்கலான் திரைப்படம் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் பா. ரஞ்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்பட்டா பரம்பரை படத்துக்கு பின்னர் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கியிருக்கும் படம் தங்கலான். விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, வேட்டை முத்துக்குமார் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படம் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைதத்தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படத்தை நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு வெளியிட உள்ளதாக இயக்குநர் பா. ரஞ்சித் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
தங்கலான் படத்தில் பல்வேறு அரசியல் தொடர்பாக பல்வேறு காட்சிகள் இடம்பிடித்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி படத்தை வெளியிட விரும்பவில்லை எனவும் தேர்தல் முடிவுக்கு பின்னர் படத்தின் ரிலீஸ் குறித்து தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
தங்கலான் பட ரிலீஸுக்கு பின் அரசியலை மையமாக கொண்ட கதையை இயக்குநர் பா. ரஞ்சித் மிக பெரிய பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டுள்ளாராம்.
இதற்கிடையே சர்பட்டா 2 படத்தின் பணிகளிலும் ஈடுபட்டு வரும் பா. ரஞ்சித், அந்த படத்தை வரும் ஏப்ரலுக்குள் முடிப்பதற்கு ஏற்ப தீவிரமாக பணியாற்றி வருவதாக விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
தங்கலான் திரைப்படம் பீரியட் படமாக, ஆங்கிலேயர் காலத்தில் கோலார் தங்க சுரங்கத்தில்் வேலை செய்த பணியாளர்களை அடிப்படையாக கொண்ட கதையம்சத்தில் உருவாகியுள்ளது. படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாபிக்ஸ்