Top 10 Cinema: திருப்பி அடித்த வடிவேலு.. ‘உசுரே நீதானே’ பாடல் வெளியீடு..தங்கலான் வசூல்! - டாப் 10 சினிமா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top 10 Cinema: திருப்பி அடித்த வடிவேலு.. ‘உசுரே நீதானே’ பாடல் வெளியீடு..தங்கலான் வசூல்! - டாப் 10 சினிமா!

Top 10 Cinema: திருப்பி அடித்த வடிவேலு.. ‘உசுரே நீதானே’ பாடல் வெளியீடு..தங்கலான் வசூல்! - டாப் 10 சினிமா!

Kalyani Pandiyan S HT Tamil
Published Aug 21, 2024 10:37 AM IST

Top 10 Cinema: வடிவேலு சிங்கமுத்து பிரச்சினை தொடங்கி அடங்காத அசுரன் பாடல் வெளியீடு வரை என தமிழ் திரையுலகின் இன்றைய டா10 சினிமா செய்திகளை இங்கே பார்க்கலாம்.

Top 10 Cinema: திருப்பி அடித்த வடிவேலு.. ‘உசுரே நீதானே’ பாடல் வெளியீடு..தங்கலான் வசூல்! - டாப் 10 சினிமா!
Top 10 Cinema: திருப்பி அடித்த வடிவேலு.. ‘உசுரே நீதானே’ பாடல் வெளியீடு..தங்கலான் வசூல்! - டாப் 10 சினிமா!

1.பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு-நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து இடையே பிரச்சினை இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், நடிகர் வடிவேலு பற்றி யூடியூப் சேனல்களில் சிங்கமுத்து அவதூறாக பேசி வந்தார். இதற்கு வடிவேலு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிங்க முத்து வடிவேலு
சிங்க முத்து வடிவேலு

2.`கூழாங்கல்' திரைப்படம் பல அங்கீகாரங்களை இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கொட்டுக்காளி. நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப்படத்தை தயாரித்து இருக்கிறார்.

இந்தப்படம் குறித்து பேசிய சூரி, “'கொட்டுக்காளி' மாதிரியான நல்ல திரைப்படம் திரையரங்குகளில் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற வேண்டும். அதற்கு மக்களாகிய நீங்கள்தான் நல்ல ஆதரவைத் தர வேண்டும் என்று பேசி இருக்கிறார்.

தங்கலான் வசூல்

3. இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம், நடிகை பார்வதி, நடிகை மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து, ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகி இருக்கும் திரைப்படம், தங்கலான். இந்தத் திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்தத்திரைப்படம் வெளியாகி நேற்றோடு 6 நாட்கள் முடிவடைந்து இருக்கும் நிலையில், தங்கலான் திரைப்படம், இது வரை உலகளவில் வசூலில் 75 கோடியை தாண்டியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

4. நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் தன்னுடைய 50 வது வருடத்தை கொண்டாடுகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாக இருக்கிறது.

5. உலகநாயகன் கமல்ஹாசன், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவான இந்தியன் 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஜுலை 12 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வந்தது. இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட மிகப்பெரிய பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இந்தப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனம் வந்த நிலையில் அண்மையில் இந்தப்படம் குறித்து பேசிய எஸ்.ஜே.சூர்யா படத்தில் தன்னுடைய வீட்டிற்கு மட்டும் 8 கோடி செலவு செய்ததாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விஜய் டார்லிங்

6. ஒலிம்பிக்கில் இரு பதக்கங்களை வென்ற மனு பாக்கர், நாடு திரும்பிய பின், அரசியல் தலைவர்களை சந்திப்பது, நிகழ்ச்சிகளுக்குச் செல்வது, தொடர்ந்து ஆட்டோகிராஃப் மற்றும் செல்ஃபி எடுப்பது என பல விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அவர் சென்னையில் இருக்கும் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் விஜய் குறித்து கேட்ட போது அவர் தனக்கு நன்றாக தெரியும் என்றும் அவர் டார்லிங் என்றும் பேசினார்.

7. தனுஷின் 50வது படமான ராயன், அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக கடந்த ஜூலை 26ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் அவர் நடித்தது மட்டுமல்லாமல், இயக்கியும் உள்ளார்.சந்தீப் கிஷான், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ் உள்பட பலரும் படத்தில் நடித்துள்ளார்கள்.ஆக்‌ஷன் த்ரில்லர் கேங்கஸ்டர் படமான ராயன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படத்தில் இருந்து வெளியாகி வரவேற்பை பெற்ற அடங்காத அசுரன் பாடல் இன்று காலை 11 மணிக்கு வெளியாக இருக்கிறது.

8. இயக்குநர் மாரில்செல்வராஜின் படங்களின் போஸ்டர்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவை பெரும்பாலும் பிளாக் அண்ட் ஒயிட்டாகவே இருக்கும். அதற்கான காரணம் குறித்து மாரிசெல்வராஜ் அண்மையில் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

அதில் அவர் பேசும் போது, “ புதியதாக நான் இன்னும் வாழ ஆரம்பிக்கவில்லை. நான் புதிதாக வாழ்கிறேன் என்று கூறினால், இப்போது என்னுடைய பிள்ளைகளோடு வாழும் வாழ்க்கைதான் என்னுடைய புதிய வாழ்க்கை. பிளாக் அண்ட் ஒயிட் மிகவும் பிடித்ததற்கான காரணம் என்னவென்றால், அம்மா அப்பாவின் போட்டோ ஒன்று வீட்டில் இருந்தது. அது பிளாக் அண்ட் ஒயிட்டாக இருந்தது. அது ஒன்று தான் அவர்களிடம் இருந்த ஒரே போட்டோ.” என்றார்.

9. விடாமுயற்சி படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை த்ரிஷா பகிர்ந்து இருக்கிறார்.

10. அமெரிக்காவில் நடக்க இருக்கும் அனிருத் இசைக்கச்சேரிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.