Naga Chaitanya: முதல் 100 கோடி ஹிட்.. வரலாறு படைத்த நாக சைதன்யா.. கொண்டாடும் ரசிகர்கள்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Naga Chaitanya: முதல் 100 கோடி ஹிட்.. வரலாறு படைத்த நாக சைதன்யா.. கொண்டாடும் ரசிகர்கள்..

Naga Chaitanya: முதல் 100 கோடி ஹிட்.. வரலாறு படைத்த நாக சைதன்யா.. கொண்டாடும் ரசிகர்கள்..

Malavica Natarajan HT Tamil
Published Feb 16, 2025 08:10 PM IST

Naga Chaitanya: தண்டேல் திரைப்படம் ரூ. 100 கோடி வசூலைக் கடந்து ஹிட் அடித்துள்ளது. இது நாக சைதன்யா சினிமா வாழ்க்கையில் முதல் 100 கோடி படமாக அமைந்துள்ளது.

Naga Chaitanya: முதல் 100 கோடி ஹிட்.. வரலாறு படைத்த நாக சைதன்யா.. கொண்டாடும் ரசிகர்கள்..
Naga Chaitanya: முதல் 100 கோடி ஹிட்.. வரலாறு படைத்த நாக சைதன்யா.. கொண்டாடும் ரசிகர்கள்..

ரூ. 100 கோடி பென்ச் மார்க்

தண்டேல் திரைப்படம் 9 நாட்களில் உலகளவில் ரூ. 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. இந்த செய்தியை திரைப்படக் குழு இன்று (பிப்ரவரி 16) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "தண்டேல் பாக்ஸ் ஆஃபிஸைத் தகர்த்தெறிந்து, தியேட்டர்களுக்கு விழாவைக் கொண்டு வந்தது. பிளாக்பஸ்டர் தண்டேல்.. உலகளவில் ரூ. 100 கோடி வசூலைக் கடந்துள்ளது" என்று சமூக வலைத்தளங்களில் படக்குழு பதிவிட்டுள்ளது.

நாக சைதன்யாவின் கம்பீரமான போஸுடன் ரூ. 100 கோடி போஸ்டரை வெளியிட்டுள்ளது திரைப்படக் குழு. #100CroresThandelJaathara (#100கோடிதண்டேல்விழா) என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளது. இந்த திரைப்படம் ரூ.100 கோடியைத் தொடும் என்று தயாரிப்பாளர் பன்னி வாசு சமீபத்தில் கூறியிருந்தார். அது 9 நாட்களிலேயே நிறைவேறிவிட்டது.

நாக சைதன்யாவின் முதல் 100 கோடி படம்

ரூ. 100 கோடி வசூல் மைல்கல்லை நாக சைதன்யா முதல் முறையாக எட்டியுள்ளார். தண்டேல் திரைப்படத்தின் மூலம் அவர் இந்த 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளார். அக்கினேனி குடும்பத்தைச் சேர்ந்த நாகார்ஜுனா, அகில் ஆகியோர் இன்னும் இந்த மார்க்கை எட்டவில்லை.

தண்டேல் கதை

தண்டேல் திரைப்படத்தில் மீனவர் ராஜு கதாபாத்திரத்தில் நாக சைதன்யா அசத்தியுள்ளார். உணர்ச்சிப் பூர்வமான காட்சிகளிலும் அவர் கவர்ந்துள்ளார். சாய் பல்லவி மீண்டும் தன் நடிப்பை வாரி இரைத்து மக்களை தன்வசம் இழுத்து மந்திரம் செய்துள்ளார். நிஜ வாழ்க்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு சந்தூ மொண்டேட்டி இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

காதல் கதை முக்கியமாக இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான் சிறையில் மாதக்கணக்கில் சிரமங்களை அனுபவித்து இந்தியா திரும்பிய மீனவர்களை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எழுதப்பட்டுள்ளது. பார்வையாளர்களை கவரும் வகையில் காதல் கதை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

தண்டேல் படக்குழு

தண்டேல் திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் அளித்துள்ள இசையும் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. பாடல்கள், பின்னணி இசை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த திரைப்படத்தில் கருணாகரன், பிரகாஷ் பெலவடி, ஆடுகாலம் நரேன், பிருத்விராஜ், சரண் தீப், கல்பலதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் பேனரில் பன்னி வாசு, அல்லு அறிவிந்த் தயாரித்துள்ளனர். தொடக்கத்திலிருந்தே இந்த திரைப்படத்தின் வெற்றியில் குழு நம்பிக்கையுடன் இருந்தது. அது நிறைவேறிவிட்டது. நல்ல வரவேற்புடன் வசூலும் சிறப்பாக உள்ளது. சைதன்யாவின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றியாக இது அமைந்துள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், 2017ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். காட்சி (விஷூவல்), டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பெரியார் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற இவர், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சினிமா, புகைப்படத்தொகுப்பு சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.