Thalapathy Vijay: சாதனையா..? சறுக்கலா..? சின்னத்திரையில் ‘தி கோட்’ படம் பெற்ற டி.வி.ஆர் எவ்வளவு தெரியுமா?
Thalapathy Vijay: ஆக்ஷன், எமோஷன், காமெடி என அனைத்தும் கலந்த வெளியாகி பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்த இந்த திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. படம் பெற்ற டி.வி.ஆர் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஆக்ஷன் திரைப்படமாக வெளியாகி வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘தி கோட்’ திரைப்படம். இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.
சின்னத்திரையில் விஜய்
ஆக்ஷன், எமோஷன், காமெடி என அனைத்தும் கலந்த வெளியாகி பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்த இந்த திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. இந்த நிலையில், தி கோட் படத்தின் டெலிவிஷன் பிரீமியர் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
பிரம்மாண்டமான கொண்டாட்டம்
விஜயின் கோட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதை கொண்டாடியதை போலவே, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போவதையும் சென்னை மதுரவாயலில் உள்ள AGS திரையரங்கில் பிரம்மாண்ட கொண்டாடினர்.
இந்த நிலையில் தற்போது வெளியான ரேட்டிங் நிலவரப்படி, தி கோட் திரைப்படத்தின் டெலிவிஷன் பிரீமியர் காட்சி 9.1 TVR புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை சின்னத்திரை வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. தற்போது இதனை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் மாபெரும் வெற்றி பெற்ற இந்த கோட் திரைப்படத்தில் நடிகர் பிரசாந்த், மைக் மோகன், பிரபுதேவா, ஜெயராம், யோகி பாபு, பிரேம்ஜி அமரன் என எக்கச்சக்கமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நடிகை சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நாயகியாக நடிக்க சிவகார்த்திகேயன், திரிஷா ஆகியோர் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விஜய் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நேற்று (26-01-2025) வெளியாகின. இந்தப்படத்தை தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
கவனம் ஈர்க்கும் செகண்ட் லுக்:
காலையில் வெளிவந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், விஜய் பொது இடத்தில் நின்று செல்ஃபி எடுப்பது போன்றும் அவருக்கு பின் ஆயிரக்கணக்கானோர் நின்று கோஷமிட்டு குரல் எழுப்புவது போன்றும் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களை கவர்ந்தது.
இதனால், விஜய்யின் கடைசி படமான ஜனநாயகத்தின் கதை அரசியலைத் தொடர்பு படுத்தி தான் இருக்கும் என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும், படத்தின் போஸ்டரில் நாங்கள் அவரை ’ஜனநாயகன்’ என அழைப்போம் என்றும் படக்குழு குறிப்பிட்டு இருந்தது.
அதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு வெளியான ஜனநாயகன் செகண்ட் லுக் போஸ்டரில், நடிகர் எம்.ஜி.ஆரின் பிரபல பாடலான ‘நான் ஆணையிட்டால்’ பாடலில் இருப்பதுபோன்று, சாட்டையுடன், சிவப்பு நிற பின்புலத்தில் விஜய் சாட்டையைச் சுழற்றினார். இந்தப்போஸ்டரும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்